அண்மைய செய்திகள்

recent
-

யாழில் கொட்டும் மழையிலும் களைகட்டும் மலர்க்கண்காட்சி...


நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்றுவரும் மலர்க்கண்காட்சியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து பார்வையிட்டுச் செல்வதோடு மரக்கன்றுகளையும் வாங்கிச் செல்கின்றனர்.
அலங்காரப் பூச்செடிகளை மாத்திரம் அல்லாமல் பழமரக்கன்றுகள், தென்னம் நாற்றுகள், தேக்கு, சமண்டலை போன்ற வெட்டுமரக்கன்றுகள், பூச்சாடிகள் போன்றவற்றை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம்காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு மலர்க்கண்காட்சியில் விற்பனையான மரக்கன்றுகளை விட இந்த ஆண்டு அதிகம் விற்பனையாவதாக கண்காட்சியில் பங்கேற்றிருக்கும் தாவரப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலர்க்கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை, கிளைவிட்ட தென்னைமரம் ஒன்றும் அதிக அளவில் கவர்ந்து வருகின்றது.

சங்கிலியன் பூங்காவின் நுழைவு வாசலுக்கு எதிரே உள்ள வளவில் வளர்ந்து காணப்படும் கிளைவிட்ட தென்னைமரம் இப்போதுதான் வெளியுலகின் கவனிப்புக்கு ஆளாகியுள்ளது. இதனால் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்கள் அதனையும் ஆர்வத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.

கடந்த ஐந்தாம் திகதி ஆரம்பமாகிய மலர்க்கண்காட்சி நாளை புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழில் கொட்டும் மழையிலும் களைகட்டும் மலர்க்கண்காட்சி... Reviewed by Author on November 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.