அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி...


ஈழப்போரில் 1989 -2009 வரை உயிரிழந்தவர்களை நினைவுக்கூரும் வகையில் இரண்டு கூட்டங்களுக்கு சென்னை மேல்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இதன்படி இந்தக்கூட்டங்கள், சேலம், கொலத்தூர் மற்றும் அலமூர் பழனிச்சாமி மைதானம் ஆகியவற்றில் இன்று இடம்பெறவுள்ளன.

திராவிடர் விடுதலைக்கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

ஏற்கனவே இந்த கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

எனினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மையமாகக்கொண்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டபோதே கூட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தின நிகழ்ச்சி பல்வேறு நாடுகளில் இன்று 27ம் திகதி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு தமிழ்நாட்டில் நடத்த அனுமதி கோரி ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, திராவிடர் விடுதலை கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், இலங்கையில் உள்நாட்டு போரில் உயிரிழந்த விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாவீரர் தின நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி இருந்தது.

இந்த வழக்குகளை தனித்தனியே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா, மாவீரர் தினத்தை தமிழகத்தில் கொண்டாட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து பெரவள்ளூர் சதுக்கம், காமராஜர் சிலை பின்புறம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையம் அருகே இன்று கூட்டம் நடைபெறுகிறது.

ஆனால் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சேலத்தில் பெரியத்தான் புலியூருக்கு பதிலாக பழனிசாமி தோப்பில் மாவீரர் தினத்தை நடத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

தமிழகத்தில் மாவீரர் தின நிகழ்ச்சிகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி... Reviewed by Author on November 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.