அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கை கண்டித்து.....


மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கை கண்டித்து அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம.......
மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10-00 மணியளவில் நடைபெற்றது
மன்னார் பொதுவைத்தியசாலையில்  காணப்படுகின்ற குறைபாடுகள் அடிப்பபடை வசதியின்மை மருத்துவர்களின் தாதியர்களின் ஊழியர்களின் அசமந்தப்போக்கு தம் கடமையினை சரிவரச்செய்யாமையினாலும் அம்புலன்ஸ் வாகனத்தட்டுப்பாடு வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை கருவிகள் பற்றாக்குறை இருக்கின்றவர்களும் தமது கடமையினை சரிவரச்செய்யாமையினால் பல உயிர்கள் பலியாகின்றன…,,,,

நானாட்டர்ன் ஆசிரியர்
நறுவிலிக்குளம் இளைஞர்
நொச்சி குளம் இளைஞர்
அடம்பன் இளைஞர்
வங்காலை இளைஞர்
இரு கர்ப்பினித்தாய்மார்கள் என பட்டியல் நீண்டு .................................................???
கொண்டே செல்கின்றது அவற்றினை உடனே தடுத்து நிறுத்தக்கோரியும் உரிய நடவடிக்கைகளை  மேற்கொள்ளக்கோரியும் இறந்தவர்களின் குடும்பங்களின் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு நஷ்ட்ட ஈடுவழங்கக்கோரியும் அமைதியான முறையில் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பதாதைகளை ஏந்தியவாறு பொது நிலையினருக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தமது பிரச்சினைகளை முன்வைத்தவாறு தங்களின் மகஐரை கௌரவ பாரளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் கையளித்தனர்  மகஐரை பெற்றுக்கொண்ட பாரளுமன்ற உறுப்பினர் தனது உரையில் இனிவருங்காலத்தில் இப்படியான பிரச்சினைகள் வராத வண்ணம் தான் பொதுவைத்திய அத்தியட்சகர் மற்றும் பணிப்பாளர்களோடும் சம்மந்தப்பட்டவர்களோடும் விஷேடகலந்துரையாடல் மூலம் இதற்கான  நல்ல தீர்வை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் தொடர்ந்தும் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்தது…

















மன்னார் பொது வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்தப்போக்கை கண்டித்து..... Reviewed by Author on November 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.