ஐக்கியமே அரசாட்சி செலுத்த வேண்டுமென்பதை விளக்கொளி பூஜை உணர்த்துகிறது: ஜனாதிபதி
தீபாவளியின் தீப ஔி மனித மனங்களில் ஔி வீசுவதால் இன நல்லிணக்கம் பிரகாசிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபாவளித் திருநாள் உலகிலிருந்து தீமையினை அகற்றி நற்செயல்களை நிலை நாட்டுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் இந்துக்களுக்கு மாத்திரமன்றி உலக மக்களுக்கே இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேதங்கள் எதுவுமற்ற விளக்கொளி பூஜையின் மூலம் ஐக்கியமே அரசாட்சி செலுத்த வேண்டுமென்பதை விளக்கொளி பூஜை உணர்த்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
உலகை சிறந்ததோர் இடமாக மாற்றுவதற்கு மனிதனின் ஆரம்ப யுகங்களிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தற்போதைய தீபாவளிக் கொண்டாட்டங்கள் உணர்த்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எக்காலத்திற்கும் பொருந்தும் தீபாவளி போன்ற விழாக்களும் அதன் உன்னத குணவியல்புகளும் எதிர்காலத்திலும் நிலைத்திருப்பது இன்றியமையாததாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைவாழ் அனைத்து இந்து மக்களுக்கும் பக்திப் பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை மலரட்டும் என ஜனாதிபதி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஐக்கியமே அரசாட்சி செலுத்த வேண்டுமென்பதை விளக்கொளி பூஜை உணர்த்துகிறது: ஜனாதிபதி
Reviewed by NEWMANNAR
on
November 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 10, 2015
Rating:


No comments:
Post a Comment