இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாகும்
இந்த ஆண்டிற்கான சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் தொணிப்பொருளாது 'ஊழல் சங்கிலியை உடைப்போம்' என்பதாகும்.
2003 ஒக்டோபர் 31ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கூட்டத்தின் போது டிசம்பர் 09ஆம் திகதியை சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆரம்பத்தில் இப்பிரகடனத்தை ஏற்றுக் கொண்டு 140 ஐக்கிய நாடுகளின் உறுப்புரிமை நாடுகள் ஒப்பமிட்டிருந்தன. 2015 டிசம்பர் வரை 178 நாடுகள் ஒப்பமிட்டுள்ளன. அந்த வகையில் 2003ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை 13 வருடங்களாக ஊழல் எதிர்ப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஊழல் குறைந்த நாடுகள் தொடர்பான சர்வதேச ரீதியான பட்டியல் படுத்தலில் இலங்கை, இந்தியா, தாய்லாந்து, ஜமெய்க்கா உள்ளிட்ட 9 நாடுகள் 38 புள்ளிகளுடன் 85ஆவது இடத்திலும், 36 புள்ளிகளுடன் சீனா 100ஆவது இடத்திலும், உள்ளன.
மேலும் டென்மார்க் 92 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும், நியூசிலாந்து 91புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், 89 புள்ளிகளுடன் பின்லாந்து 3ஆம் இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் கடைசி இடமான 174 ஆவது இடத்தில் சோமாலியா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் 8 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமாகும்
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:


No comments:
Post a Comment