மன்னார் ஆயர் சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார்!
சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சை பெறுமுகமாக சிங்கப்பூர் சென்றிருந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தற்பொழுது நாடு திரும்புவதற்கான ஆய்த்தங்களை மன்னார் ஆயர் இல்லம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மூன்று மாதங்களாக சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகையை இப்பொழுது இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மன்னார் ஆயர் வட்டாரம் தெரிவிக்கின்றது
மன்னார் ஆயர் சிகிச்சை முடிந்து நாடு திரும்புகிறார்!
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 09, 2015
Rating:


No comments:
Post a Comment