அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் விசாரணைகளை முன்னெடுக்கும் காணோமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ...


காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.

குறித்த விசாரணை நடவடிக்கைகள் இம் மாதம் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 16 ஆம் திகதி புதன்கிழமை வரை வடக்கில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழ். மாவட்டசெயலகத்தில் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை  8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்பெறும் அமர்வில் நல்லூர் பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும்  12 ஆம் திகதி  சனிக்கிழமை காலை 8.30 மணி முதல்  மாலை 5.30 மணி வரை யாழ். மாவட்டசெயலகத்தில் இடம்பெறும் அமர்வில் யாழ்.பிரதேச சபையைச் சேர்ந்தவர்களும்  13 ஆம் திகதி காலை  8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் கரவெட்டி மற்றும் மருதங்கேணி பிரதேசபைகளைச் சேர்ந்தவர்களும்  14 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் வடமராட்சி வடக்கு பிரதேச சபையை சேர்ந்தவர்களும் 15 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சங்கானை  பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் 16 ஆம் திகதி  காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெறும் அமர்வில் உடுவில் மற்றும் தெல்லிப்பளை பிரதேச சபைகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என ஊடக அறிக்கையில்  மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் விசாரணைகளை முன்னெடுக்கும் காணோமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ... Reviewed by Author on December 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.