மன்னாரில் பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இடம் தருமாறு கோரி நகர சபையை சூழ்ந்து கொண்ட வர்த்தகர்கள்.(படம் இணைப்பு)
பண்டிகைக்கால வியாபர நடவடிக்கைகளுக்காக மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் வழங்கப்படவிருந்த கடைகள் வழங்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,எதிர்வரும் 8 ஆம் திகதி பகிரங்க கூறுவிலை கோரல் மற்றும் பகிரங்க கோள்வி கோரல் மூலம் கடைகள் வழங்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் இன்று (1) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நத்தார் மற்றும் புது வருட பண்டிகைகளுக்காக மன்னாரில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்;ளூர் மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு விண்ணப்பம் மூலம் கடைகள் தெரிவு செய்யப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள நகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இவ் வருடமும் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை 'மன்னார் எஸ்பிளேனட்' வீதியில் கடைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
-இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(1) காலை 7.30 மணிமுதல் மன்னார் மாவட்டம் மற்றும் தென் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் மன்னார் நகர சபைக்கு முன் ஒன்று கூடி தமக்கு பண்டிகைக்கால வியாபார நிலையம் அமைக்க இடம் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வர்த்தகர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் தின்டாடியா மன்னார் நகரசபை மன்னார் பொலிஸாரின் உதவியை நாடிய நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் மன்னார் நகர சபைக்கு அழைக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையினால் 'மன்னார் எஸ்பிளேனட்' வீதி மற்றும் அதனை அன்டிய பகுதிகளில் 175 வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் சுமார் 300 இற்கும் அதிகமானவர்கள் தமக்கு இடம் தருமாறு கோரியமையினால் நகர சபையினால் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தனர்.
இந்த நிலையில் பொலிஸார் நகர சபைக்கு வந்து பாதுகாப்பு வழங்கினர்.
இந்த நிலையில் இன்றைய தினம் வர்த்தக நிலையங்களுக்கான இடம் நகர சபையினால் வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி(8-12-2015)'மன்னார் எஸ்பிளேனட்' வீதியில் உள்ள கடைகள் பகிரங்க கூறு விலை கோரல் மூலம் வழங்கப்படும் எனவும்,ஏனைய கடைகள் அதனைத்தொடர்ந்து பகிரங்க கேள்வி கோரல் நடைமுறை மூலம் வழங்கப்படும்.என மன்னார் நகர சபை செயலாளர் அறிவித்திருந்தார்.
-இந்த நிலையில் மன்னார் நகர சபையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான வர்த்தகர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதே வேளை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீதியான முறையில் தமக்கு பண்டிகைக்கால வியாபாரங்களை மேற்கொள்ள இடம் ஒதுக்கித்தர வேண்டும்.என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(01-12-2015)

Reviewed by NEWMANNAR
on
December 01, 2015
Rating:
No comments:
Post a Comment