அண்மைய செய்திகள்

recent
-

வளர்ப்பு நாயை பராமரிக்க 27 லட்சம் செலவழிக்கும் கவர்ச்சி நடிகை: சொகுசாக வளரும் செல்லப்பிராணி


பிரித்தானிய நாட்டில் வசித்து வரும் முன்னாள் கவர்ச்சி மொடல் நடிகை ஒருவர் தன்னுடைய வளர்ப்பு நாயை பராமரிக்க 27 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பாசில்டன் நகரில் Harriette Cranfield (24) என்ற முன்னாள் கவர்ச்சி மொடல் நடிகை வசித்து வருகிறார்.

செல்லப்பிராணிகள் மீது அதிக விருப்பம் இருப்பதனால், இவரது வீட்டில் 3 வயதான ’பிங்கி’ என்ற பெண் நாயை வளர்த்து வருகிறார்.

நடிகை தன்னுடைய அழகை பரிமாரிக்க செலவிடும் பணத்தை விட இந்த வளர்ப்பு நாயை பராமரிக்க செலவிடும் தொகை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிங்கிக்கு விதவிதமான நிறங்களில் ஆடைகள், வாசனை திரவியங்கள், உயர்ரக குளியல் சவுக்காரங்கள், ஆடம்பரமான அணிகலன்கள் என மாதந்தோறும் சுமார் ஒரு லட்சம் ரூபாய் (500 பவுண்ட்) செலவிடுகிறார்.

பிங்கியின் ஆடைகளை பத்திரப்படுத்துவதற்காகவே தனியாக ஒரு அறையில் அலமாரி உள்ளது. மேலும், பிங்கி தூங்குவதற்கு விளையாடுவதற்கு என அனைத்திற்கும் சொகுசான வசதிகளை அந்த மொடல் செய்து வருகிறார்.

இவ்வாறு கடந்த 2 வருடங்களில் மட்டும் பிங்கிற்காக சுமார் 27 லட்சம் ரூபாய் வரை (13,000 பவுண்ட்) செலவிட்டுள்ளதாக கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து அந்த மொடல் கூறியபோது, ‘பிங்கிக்கு ஆடம்பர வாழக்கை மிகவும் பிடித்துள்ளது. ஒரு முறை அணிந்த சட்டையை அதற்கு அணிவித்தால், அதனை ஏற்காமல் மறுத்துவிடும்.

அதே போல், அடிக்கடி கண்ணாடியில் தனது உருவத்தை பார்த்து பரவசம் அடையும்’ என கூறியுள்ளார்.

தற்போது அழகுச்சாதன துறையில் பணியாற்றும் நேரம் தவிர, எஞ்சிய நேரங்களில் பிங்கியை அலங்கரித்து அதனுடன் பொழுதை கழிப்பதை பெரிதும் விரும்புவதாக அவர் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.





வளர்ப்பு நாயை பராமரிக்க 27 லட்சம் செலவழிக்கும் கவர்ச்சி நடிகை: சொகுசாக வளரும் செல்லப்பிராணி Reviewed by Author on January 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.