33 மில்லியன் பவுண்ட் பரிசு வென்ற லாட்டரி சீட்டை ’வாஷிங் மெஷினில்’ போட்ட பெண்: பரிசை பெற்றாரா?
பிரித்தானிய நாட்டில் 33 மில்லியன் பரிசு தொகையை வென்ற லாட்டரி சீட்டை பெண் ஒருவர் எதிர்பாராமல் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டதால் அவருக்கு பரிசு தொகை கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்தில் Camelot என்ற லாட்டரி நிறுவனம் 33 மில்லியன் பவுண்ட் பரிசுக்காக லாட்டரியை கடந்த 9ம் திகதி விற்பனை செய்துள்ளது.
இந்த பரிசு சீட்டை Worcester நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவர் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று 33 மில்லியன் பரிசை வென்ற லாட்டரி சீட்டு Worcester நகரில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், பரிசு சீட்டின் உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் நிறுவனத்தை தொடர்புக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியானது.
இதனை தொடர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி அந்த பெண் மற்றும் அவரது மகள் அந்த சீட்டை பல இடங்களில் தேடியுள்ளனர்.
பின்னர், துணிகளை துவைக்கும் இயந்திரத்தில் இருந்த ஜீன்ஸ் உடுப்பில் கிழிந்திருந்த அந்த சீட்டை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனினும், பரிசை வென்ற எண்களை சரிப்பார்த்தபோது அந்த எண்கள் மிகச்சரியாக பொருந்தியுள்ளது.
ஆனால், பரிசு சீட்டில் இருந்த திகதி மற்றும் Bar code ஆகியவை தண்ணீரில் நனைந்து கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது.
இந்த தகவலை சேகரித்த அந்த பெண், இது குறித்து செய்தி ஏஜெண்ட் நிறுவனம் ஒன்றிற்கு விவரங்களை அளித்துள்ளார்.
இதன் மூலமாக லாட்டரி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. பெண்ணை தொடர்புக்கொண்ட நிறுவனத்தினர் லாட்டரியில் உள்ள தகவல்கள், எங்க வாங்கப்பட்டது? திகதி மற்றும் நேரத்தை உடனடியாக தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எனினும், பெண்ணிற்கு உறுதியாக பரிசு தொகை கிடைக்குமா என்ற தகவல்கள் வெளியாகவில்லை.
ஏனெனில், பரிசு சீட்டு விற்பனை ஆன நாள் முதல் 180 நாட்களுக்கு உறுதியான முடிவினை நிறுவனம் அறிவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
33 மில்லியன் பவுண்ட் பரிசு வென்ற லாட்டரி சீட்டை ’வாஷிங் மெஷினில்’ போட்ட பெண்: பரிசை பெற்றாரா?
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment