அமெரிக்காவுக்கு பனி.. பிரித்தானியாவுக்கு மழை: அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஜோனாஸ் புயல்
அமெரிக்காவில் கடும் சேதத்தை ஏற்படுத்திய ஜொனாஸ் புயல் பிரித்தானியாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் கடந்த 21 திகதி உருவான புயல் அந்நாட்டின் பெரும் பகுதியிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஜோனாஸ் என பெயரிடப்பட்ட இந்த பனி புயல் நியூயோர்க், வாஷிண்டன்,நியூ ஜெர்சி உள்ளிட்ட நகரங்களை கடும் பனி பொழிவை ஏற்படுத்தியது.
சுமார் 48 மணி நேரங்களுக்கு மேல் பெய்த பனியின் கரணமாக மலையளவு பனி குவிந்தது. இந்த புயலினால் 40க்கு அதிகமானோர் பலியாகினர்.
இந்நிலையில் தற்போது இந்த புயல் மத்திய அட்லாண்டிக் கடல் வழியாக ஐரோப்பாவை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக பிரித்தானியாவின் 4 இன்ச் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் 70 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பிரித்தானியாவின் வடப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வேல்ஸ், ஸ்காட்லந்து, யோர்க்ஷயர், டிவோன் போன்ற பகுதிகள் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் தற்போது அங்கு தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணித் தியாலங்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுக்கு பனி.. பிரித்தானியாவுக்கு மழை: அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ஜோனாஸ் புயல்
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment