தெற்காசிய குத்துச்சண்டை : 5 பதக்கங்களை இலங்கை கைப்பற்றும்...
தெற்காசிய விளையாட்டு விழாவின் குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை 5 பதக்கங்களை கைப்பற்றும் என இலங்கை குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயலாளரான மஹேஷ் தஹநாயக்க வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
''இலங்கை குத்துச் சண்டை குழாமானது 10 வகையான போட்டிப்பிரிவுகளில் பங்குகொள்ளவுள்ளது. இதில் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 5 பதக்கங்களை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது.
தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் இலங்கை குத்துச்சண்டை குழாமுக்கு இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி கிடைத்துள்ளதுடன் இதில் 7 வீரர்களும் 3 வீராங்கனைகளும் அடங்குகின்றனர்.
இலங்கை குத்துச் சண்டை குழாமில் முன்னணி வீராங்கனையாகத் திகழும் அனுஷா கொடித்துவக்கு இக்குழாமில் அடங்குகின்றமை விஷேட அம்சமாகும். இவர், சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை பெற்றுக்கொடுத்துள்ளதனால், இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுவதாக குத்துச் சண்டை ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மேற்படி தெற்காசிய குத்துச்சண்டை போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய குத்துச்சண்டை : 5 பதக்கங்களை இலங்கை கைப்பற்றும்...
Reviewed by Author
on
January 18, 2016
Rating:

No comments:
Post a Comment