அண்மைய செய்திகள்

recent
-

வீடற்றவர்களுக்காக இளம்பெண் ஒருவர் உருவாக்கிய சிறப்பு போர்வை: குவியும் பாராட்டுகள்...


பிரித்தானியாவில் வீடற்றவர்கள் பயன்பாட்டிற்காக இளம்பெண் ஒருவர் உருவாக்கிய சிறப்பு போர்வை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பிரித்தானியாவில் Emily Duffy எனும் 15 வயது இளம்பெண் ஒருவர் உயிர்காக்கும் சிறப்பு போர்வை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

வளர்ந்து வரும் விஞ்ஞானியான Duffy வீடவற்றவர்கள் பயன்பாட்டிற்காக வடிவமைத்துள்ள இந்த சிறப்பு போர்வைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.

இந்த சிறப்பு போர்வையால் பயன்பாட்டாளர்கள் நெருப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம், மேலும் தண்ணிர் உள்ளே பூகாது எனபதும் இதன் சிறப்பு.

கடும் குளிர் காலமாதலால் பெரும்பாலான வீடற்றவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்ற இந்த சூழலில் இது போன்ற சிறப்பு போர்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என Duffy தெரிவித்துள்ளார்.

மிக குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கும் இந்த சிறப்பு போர்வை அவர்களின் பொருளாதாரத்திற்கு ஏற்றவகையில் மலிவான விலையில் கிடைக்கும் என்பது இதன் சிறப்பாக கருதப்படுகிறது.


வீடற்றவர்களுக்காக இளம்பெண் ஒருவர் உருவாக்கிய சிறப்பு போர்வை: குவியும் பாராட்டுகள்... Reviewed by Author on January 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.