அண்மைய செய்திகள்

recent
-

யாழில் இளைஞர் உண்ணாவிரதம்: தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர்!...


வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்திவரும் இளைஞனை முதலமைச்சரின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் மேற்படி இளைஞன் உண்ணாவிரதப்  போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் முதலமைச்சரின் பணிப்பிற்கமைய அவருடைய செயலாளர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் போது முதலமைச்சர் உண்ணாவிரதம் இருப்பதை ஒத்துக் கொள்ளவில்லை. நீங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

எனினும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்த இளைஞன் மாலை 6 மணி வரையில் போராட்டத்தை தொடரப் போவதாக கூறினார்.

இதனையடுத்து முதலமைச்சர் குறித்த இளைஞருடன் தொலைபேசியில் உரையாடினார்.


முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள்! யாழில் இளைஞர் உண்ணாவிரதம்

வடக்கில் உள்ள தமிழர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என கோரி வரணி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக கவனயீர்ப்பு உண்ணா விரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

வரணி பகுதியை சேர்ந்த நா.துஷாந்த் என்ற இளைஞனே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் முன்னெடுத்து வருகின்றார்.




வடமாகாண முதலமைச்சரை சுதந்திரமாக செயற்பட விடுங்கள், முதலமைச்சர் மீது அவதூறு செய்யாதீர்கள், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள், தமிழ் மன்னர்களின் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்ற 4 கோரிக்கையை முன்வைத்து, யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக குறித்த இளைஞன் மேற்படி கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றார்.


யாழில் இளைஞர் உண்ணாவிரதம்: தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதலமைச்சர்!... Reviewed by Author on January 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.