கருத்தரித்தலை ஊக்குவிக்க ரோபோ விந்தணுக்கள்...
கருத்தரிப்பதில் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள தம்பதிகளுக்கு உதவும் முகமாக தூர இருந்து இயக்கும் முறைமை மூலம் செயற்படும் ரோபோ விந்தணுக்களை உருவாக்கும் செயற்கிரமத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
விந்தணுக்கள் உரிய வேகத்தில் நீந்தாது மந்தமாக நீந்துவது கருத்தரிப்பதில் பிரச்சினை ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகவுள்ளது. ஜேர்மனிய டிரஸ்டன் நகரிலுள்ள இன்டர்கிரேட்டிவ் நனோசயன்சஸ் நிறுவகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையானது மனித விந்தணுக்களின் செயற்பாட்டை வேகப்படுத்தும் முகமாக அந்த விந்தணுக்களுடன் காந்த சக்தியு டைய செயற்கை வால்களை இணைப்பதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. செயற்கையான வால் பொருத்தப்பட்ட மேற்படி விந்தணுக்களை ஸ்பேர்ம்பொட்ஸ் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
இந்த வாலின் விட்டம் ஒரு மில்லிமீற்றரில் நான்காயிரத்தில் ஒரு மடங்கு அளவுள்ளதாகும். மேற்படி காந்தப் படலத்தைக் கொண்ட பிளாஸ்டிக்காலான வால், விந்தணுக்களின் தலைப் பகுதி கருமுட்டைக் குள் ஊடுருவிச் செல்வதை தூண்டி கருத்தரித்தலை ஊக்குவிக்கிறது.
இந்த பரிசோதனை முறையானது ஏற்கனவே மாடுகளில் பரீட் சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது மனித விந்தணுக்களு டன் காந்த சக்தியுடைய வாலைப் பொருத்தும் நடவடிக்கையில் மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
கருத்தரித்தலை ஊக்குவிக்க ரோபோ விந்தணுக்கள்...
Reviewed by Author
on
January 18, 2016
Rating:

No comments:
Post a Comment