25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்த சீனப் பொருளாதாரம்...
சீனப் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவிகிதத்தில் இருந்து கடந்த 2015ம் ஆண்டில் 6.9 சதவிகிதமாக சரிந்துள்ளது.
இந்த தகவலை அந்நாட்டு தேசிய புள்ளி விவரங்கள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த பொருளாதாரச் சரிவு உலக முதலீட்டாளர்களை கவலையடைச் செய்துள்ளது.
இந்த பொருளாதார மந்த நிலை உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆனால் பொருளாதார வளர்ச்சி குறைவு மிகைப்படுத்தப்படுகிறது என்று சீனா மறுப்பு தெரிவிக்கிறது.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பொருளாதார வளர்ச்சியில் அதிவேகம் கண்ட சீனா, கடந்த இரண்டு வருடங்களில் குறைவேகத்தை கண்டுள்ளது.
சீனா பொருளாதாரத்தை மீண்டு சமமான நிலையை எட்டசெய்ய முயற்சித்து வருகிறது என்றும் தொடர்ச்சியான உயர் பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தியின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்த சீனப் பொருளாதாரம்...
Reviewed by Author
on
January 19, 2016
Rating:

No comments:
Post a Comment