இந்து கடவுளை இழிவுபடுத்திய விவகாரம்: டோனிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட்!
இந்துக்களின் மத உணர்வை இழிவுபடுத்திய விவகாரத்தில் டோனிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்து கடவுள் விஷ்ணுவை தவறாக சித்தரித்து விளம்பரப் படம் எடுத்தாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி மீது சமூக ஆர்வலர் ஜெயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில், முன்னதாக நான் இந்த விளம்பரப்படத்தில் தவறாக நடிக்கவில்லை என்றும், அதற்கு சம்பளம் ஏதும் வாங்கவில்லை எனவும் டோனி விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் டோனி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை அனந்தப்பூர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் டோனிக்கு பிணையில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சனவரி 25ம் திகதி டோனி நேரில் ஆஜராக வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது டோனி அவுஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். இந்த தொடர் சனவரி 31ம் திகதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து கடவுளை இழிவுபடுத்திய விவகாரம்: டோனிக்கு பிணையில் வெளிவர முடியாத கைது வாரண்ட்!
Reviewed by Author
on
January 08, 2016
Rating:
Reviewed by Author
on
January 08, 2016
Rating:


No comments:
Post a Comment