மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை 77 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2015 ஆம் ஆண்டு 66 டெங்கு நோயளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.
-கடந்த வருடம் 66 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட போதும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 18 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
-இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தற்போது வரை மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வரவதாகவும் தற்போது மன்னார் நகரில் டெங்கு நுளம்பின் தாக்கம் காணப்படுகின்ற 14 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு விசேட டெங்கு ஒழிப்பு வேளைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இது வரை 77 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட்.
Reviewed by NEWMANNAR
on
January 12, 2016
Rating:
No comments:
Post a Comment