மன்னார் நகரில் அடையாளம் காணப்பட்ட 14 கிராமங்களில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு சோதனைகள்-முப்படையினருடன் இணைந்து சுகாதார திணைக்கள பணியாளர்கள் களத்தில்.photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்னார் நகர் பகுதிகளில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துச் செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த டெங்கு நுளம்பின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இன்று(11) திங்கட்கிழமை முதல் மன்னார் நகரில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் தெரிவித்தார்.
-மன்னார் நகரில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமாக காணப்படுகின்ற 14 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் டெங்கு கட்டுப்பாடு தொடர்பாக முப்படையினருடன் சுகாதார திணைக்கள உத்தியோகஸ்தர்களும் இணைந்து அடையாளம் காணப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளில் இன்று திங்கட்கிழமை(11) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன் கிழமை வரையிலான மூன்று தினங்கள் இல்லங்களை தரிசித்து வருகின்றனர்.
-சுமார் 3 ஆயிரம் வீடுகளில் இவ்வாறு சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மக்களுக்கு வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை முதல் வீடுகள் தரிசிக்கப்பட்டு வருகின்றது.
-குறிப்பாக நீர் தேங்கி நின்று டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வகையிலான பொருட்கள் வீடுகளில் காணப்படும் வகையில் அவற்றை அகற்றி எங்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.சேகரிக்கப்படுகின் பொருட்கள் நகர சபையினால் அனுப்பப்படும் அழிவுகளை சேகரிக்கும் உழவு இயந்திரம் மூலம் அகற்றிச் செல்லப்படும்.
இதன் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை முதல் மன்னார் நகரில் அடையாளம் காணப்பட்டுள்ள பல வீடுகளில் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரூபன் லெம்பேட் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகரில் அடையாளம் காணப்பட்ட 14 கிராமங்களில் உள்ள வீடுகளில் டெங்கு நுளம்பு சோதனைகள்-முப்படையினருடன் இணைந்து சுகாதார திணைக்கள பணியாளர்கள் களத்தில்.photos
Reviewed by NEWMANNAR
on
January 11, 2016
Rating:
No comments:
Post a Comment