வரலாற்றில் 19 வருடத்திற்குப் பின் சாதனையைப் பெற்றுக்கொடுத்த மாணவர்கள்...
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் வரலாற்றிலேயே 19 வருடத்திற்குப் பின்னர் இரண்டு மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி சாதனைபடைத்துள்ளனர்.
யுத்தத்தின் வடுக்கள் ஆறவில்லை, சுனாமியின் தடையங்கள் மறையவில்லை. இருப்பினும் கல்வித்துறையின் மூலம்தான் எதிர்கால சாந்ததியை உருவாக்க முடியும் என்ற அடிப்படையில் வாகரை பிரதேசம் கல்வித்துறையில் சற்று முன்னேற்றம் அடைந்துவருகின்றது.
கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் பாடசாலையில் 1996ஆம் ஆண்டு உயர்தரத்தில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டபோதும் 2015ல் தான் இரு மாணவர்கள் பல்கலைகழகம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாகரை கல்விக் கோட்டத்தில், பால்சேனை வாகரை மகா வித்தியாலயம், கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலம் போன்ற உயர்தர பாடசாலைகள் உள்ளடங்குகின்றது.
வாகரையில் பல பிரதேசங்களில் இன்றுவரை அடிப்படை வசதிகள் கூட சீர் செய்யப்படாமல் காணப்படுகின்ற நிலையில் மாணவர்களின் கல்வி நிலைக்கும் பெரும் சிரமமாக காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பு:
இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் தெரிவான வடக்குக் கிழக்கைச் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு உதவ விரும்பும் உள்ளங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஊடாக உங்கள் உதவிகளை வழங்க முடியும்.
அவ்வாறு உதவும் உள்ளங்கள் ஊடாக வழங்கப்படும் உதவிகள் அனைத்தும், குறிப்பாக 120 வறிய மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகி இருந்தால் மொத்த நிதியில் இருந்து சமமாக பங்கீடு செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கின்றோம்.
அத்துடன் உங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பான விபரம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்.
தொடர்புகளுக்கு
Name : Federation of Young Men’s Hindu Association, Batticaloa district.
Bank : Commercial Bank Batticaloa
Account number : 1105040264.
SWIFT CODE : CCEYLKLX,
Bank Code : 7056-105
0094776034559, 0094652228018
வரலாற்றில் 19 வருடத்திற்குப் பின் சாதனையைப் பெற்றுக்கொடுத்த மாணவர்கள்...
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment