ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு இலங்கை வருகிறது!
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்நிலை அதிகாரிகள், இலங்கை வரவுள்ளனர். எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை இவர்களின் இலங்கை விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை உட்பட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் ஆராயும் முகமாகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் இலங்கையில் வர்த்தக சமூகத்தினரை மையமாகக் கொண்டு ஜீஎஸ்பி பிளஸ் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தவுள்ளனர்.
இதன்போது இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிசலுகையை பெற்றுக்கொள்வதற்கான ஏதுக்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றிய உயர்குழு இலங்கை வருகிறது!
Reviewed by Author
on
January 11, 2016
Rating:

No comments:
Post a Comment