வெள்ளை மாளிகையில் 106 வயது பெண்ணுடன் நடனமாடிய ஒபாமா ....
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் 106 வயது பெண்மணியுடன் சேர்ந்து வெள்ளை மாளிகையில் நடனம் ஆடியுள்ளனர்.
அமெரிக்காவின் ஜனபாதிபதியை சந்திக்க வேண்டும் என்பது எனது ஆசை என Virginia McLaurin என்ற பெண்மணி கடந்த 2014 ஆம் ஆண்டு தெரிவித்துள்ளார்.
அப்போது, இவருக்கு வயது 104. இவருடைய இந்த ஆசையானது ஊடகங்கள் வாயிலாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளை மாளிகையை எட்டியுள்ளது.
தற்போது 106 வயதை அடைந்துள்ள Virginia - க்கு வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்ததையடுத்து, , ஜனாதிபதி ஒபாமா மற்றும் மிச்செல்லை சந்தித்த அவர், உற்சாக வெள்ளத்தில் அவர்களுடன் சேர்ந்து நடனமாடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள இதுதொடர்பான வீடியோவில், மாளிகைக்குள் நுழையும் அப்பெண்மணியை ஒபாமா வரவேற்கிறார், அவரை பார்த்த உற்சாகத்தில் அப்பெண்மணி சத்தம் எழுப்பியவாறு விரைந்து சென்று அவரது கரங்களை பற்றிக்கொள்கிறார்.
அதன் பின்னர் வரும் மிச்செல் ஒபாமாவும் இவரை வரவேற்று கட்டியணைக்கிறார், அதன் பின்னர் மூவரும் சேர்ந்து நடனமாடுகிறார்கள், அப்போது அப்பெண், நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்... கருப்பு ஜனாதிபதி என்று கூறுகிறார், உடனே மிச்செல் அந்த பெண்மணியை பார்த்து, அவர்தானே கருப்பு என்கிறார்.
அதற்கு அப்பெண், கருப்பு மனைவி என்கிறார், உடனே மிச்செல் என்னைத்தான் சொல்கிறீர்களா என்று கேட்கிறார், அதற்கு அப்பெண் ஆமாம் என்று சொல்லிவிட்டு, வாருங்கள் நாம் கருப்பின வரலாற்றை கொண்டாடுவோம் என்று கூறி, மீண்டும் நடனமாட ஆரம்பிக்கிறார்கள்.
1910 ஆம் ஆண்டு பிறந்த இப்பெண்மணி, 14 வயதில் திருமணம் செய்துகொண்டார், 17 வயதில் இவரது கணவர் இறந்துவிடவே அன்று முதல் வீட்டு வேலை செய்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளை மாளிகையில் 106 வயது பெண்ணுடன் நடனமாடிய ஒபாமா ....
Reviewed by Author
on
February 24, 2016
Rating:

No comments:
Post a Comment