அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்...



சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
சுவிஸில் குற்றம் புரிந்த வெளிநாட்டினர்களை நாடு கடத்துவது தொடர்பான விவகாரம் முற்றி வரும் நிலையில், சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதாவது, 2006 முதல் 2014ம் ஆண்டு வரை சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு வெளிநாட்டினர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், ’குற்றம் புரிந்த வெளிநாட்டினர்களை நாடுகடத்த வேண்டும்’ என சுவிஸ் மக்கள் கட்சி கொண்டு வந்துள்ள புதிய மசோதா வெளிநாட்டினர்களை குடியுரிமை பெறுவதற்கு வேகப்படுத்தியுள்ளது.

சுவிஸ் குடியமர்வு துறை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014ம் ஆண்டை விட சுவிஸ் குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதாவது, 2014ம் ஆண்டு முடிவு வரை 32,988 வெளிநாட்டினர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றிருந்தனர்.

ஆனால், இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டின் முடிவில் 20 சதவிகிதம் அதிகரித்து 40,588 என்ற எண்ணிக்கைக்கு அதிகரித்துள்ளது.

சுவிஸில் 2015ம் ஆண்டில் மட்டும் இலங்கையை சேர்ந்த 767 நபர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இதே வரிசையில், இத்தாலி - 5,477, ஜேர்மனி - 5,212, போர்ச்சுகல் - 3,614, பிரான்ஸ் - 2,583, பிரித்தானியா – 614, அமெரிக்கா – 390 நபர்கள் சுவிஸ் குடியுரிமை பெற்றுள்ளனர்.

சுவிஸில் வெளிநாட்டினர்கள் குடியுரிமை பெறுவதற்கு 3,000 பிராங்க் தொகைக்கு மேல் செலவாகும்.

சுவிஸ் குடியுரிமைக்கு தெரிவாக மத்திய, மாகாண மற்றும் உள்ளூர் வரை நேர்காணல்கள் நடைபெற்று சுமார் 3 வருடங்களில் குடியுரிமை வழங்கப்படும் என குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்... Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.