அண்மைய செய்திகள்

recent
-

15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்ற கனேடிய மேயர்: காரணம் என்ன தெரியுமா?


கனடா நாட்டை சேர்ந்த மேயர் ஒருவர் கடந்த 15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்றது ஏன் என்பதற்கான காரணத்தை உருக்கத்துடன் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அலுவலக பணிக்கு செல்பவர்கள் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் கூட தொடர்ந்து ஒரே உடுப்பில் செல்ல வாய்ப்புள்ளது.

ஆனால், பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Coquitlam என்ற நகரத்திற்கு மேயராக பணியாற்றி வரும் Richard Stewart என்பவர் கடந்த 15 மாதங்களாக அலுவலகத்திற்கு ஒரே உடுப்பில் சென்றுள்ளார் என்பது தற்போது பல அரசியல்வாதிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கு மேயர் கூறியுள்ள விளக்கம் அனைவரையும் மெய்சிலர்க்க வைத்துள்ளது.

இந்த மாகாண அரசியலில் உள்ள ஆண் மற்றும் பெண் தலைவர்களுக்கு இடையே பல பாகுபாடுகள் இருந்து வருகிறது.

குறிப்பாக, அரசியலில் உள்ள பெண்கள் எந்த உடுப்பை அணிய வேண்டும் என சில விதிமுறைகளை மூத்த அரசியல்வாதிகள் விதித்துள்ளனர்.

‘குறிப்பிட்ட உடுப்பை தான் உடுத்த வேண்டும். மற்றவர்களின் முகம் சுழிப்பது போன்ற உடுப்புகளை உடுத்தக்கூடாது’ என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனை பல பெண் அரசியல்வாதிகள் வேதனைப்பட்டு என்னிடம் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், ஆண் அரசியல்வாதிகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது. ஆண்கள் விரும்பிய உடுப்புகளை உடுத்தலாம். ஆனால், பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த கட்டுப்பாடுகள்

இதனை மற்றவர்களுக்கு உணர்த்தவே கடந்த 15 ஆண்டுகளாக தான் ஒரே உடுப்பில் அலுவலகம் சென்றேன்.

பொதுமக்களுக்கு சேவை செய்யும் நமக்குள் இந்த பாகுபாடு இருப்பது பொதுமக்கள் இடையே அவப்பெயரை ஏற்படுத்துவதுடன் இந்த கட்டுப்பாடுகள் பெண்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவது போன்று மாறியுள்ளது.

இதனை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவும் இவ்வாறு நடந்துக்கொண்டதாக மேயர் தெரிவித்துள்ளர்.
15 மாதங்களாக ஒரே உடுப்பில் அலுவலகம் சென்ற கனேடிய மேயர்: காரணம் என்ன தெரியுமா? Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.