பயங்கரம் அறியாமல்....சுவிஸில் 15 ஆயிரம் பெண்கள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அதிர்ச்சி தகவல்
சுவிஸ் நாட்டில் 15 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களில் பிறப்புறுப்பு அழித்தல் என்பது உலகளவில் பெரும்பாலான நாடுகளில் நடைபெற்றுவருகின்றன.
மதம் சார்ந்த நடவடிக்கையாக இது பார்க்கப்படுவதால் இதனை தடுக்க முடியாமல் சமூக ஆர்வலர்கள் தவித்துவருகின்றனர்.
எனினும் ஒரு சில நாடுகளுகளில் இந்த செயலை சட்டவீரோதமானது என்று அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுவிஸில் இந்த செயலுக்கு எதிராக போராடி வரும் இரண்டு பெண்கள் கூறியதாவது, சுவிஸில் 15 ஆயிரம் பெண்கள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது வெறும் தோராயமான கணக்கு தான் உண்மை கணக்கு யாருக்கும் தெரியாது.
ரகசியமாக நடப்பது, பெண்களில் அறியா வயதிலேயே நடப்பது, மற்றும் பெரும்பாலான பிறப்புறுப்பு அழித்தல் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படுவதால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் காட்டிக்கொடுப்பதில்லை.
இந்த மூன்று காரணங்களால் தான் இதை தடுக்க முடியாமல் உள்ளது. சுவிஸில் இது சட்டவிரோதமாகும்.
எனினும் சில மருத்துவர்கள் இச்செயலை செய்கின்றனர். பெரும்பாலானோர் பாதிக்கப்படும் பெண்களில் நிலை பற்றி சிந்திப்பதில்லை.
மேலும் மக்களும் இதை தடுப்பதில் பங்கெடுப்பதில்லை.
தற்போது, இந்த பழக்கம் அதிகமுள்ள நாடுகளில் இருந்து சுவிஸுக்கு வந்துள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கூட இதனை எதிர்க்க தொடங்கிவிட்டனர்.
கல்வி மூலம் தான் இந்த பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரம் அறியாமல்....சுவிஸில் 15 ஆயிரம் பெண்கள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அதிர்ச்சி தகவல்
Reviewed by Author
on
February 14, 2016
Rating:
Reviewed by Author
on
February 14, 2016
Rating:


No comments:
Post a Comment