சம்பூரில் கடற்படை முகாம் அகற்றப்படுவது உறுதி!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
சம்பூரில் காணப்படும் பிரதான மூன்று கடற்படை முகாம்களில் ஒன்றை மட்டுமே அரசாங்கம் இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குறித்த இடமாற்றம் காரணமாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படப் போவதில்லை என பிரதியமைச்சர் அஜித். பி. பெரேரா உறுதியளித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சம்பூரில் மூன்று பிரதானமான கடற்படை முகாம்கள் உள்ளன. இவற்றில் ஒரு முகாம் மாத்திரமே இடமாற்றம் செய்யப்படவுள்ளது.
குறித்த முகாமை இடமாற்றம் செய்வதற்கு அங்குள்ள கடற்படையினர் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
எனவே தற்போதுள்ள முகாமிலிருந்து மூன்று கிலோமீற்றர் தூரத்தில் புதிய முகாமினை நிர்மாணிக்க தீர்மானித்தோம்.
மேலும் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் சம்பூரில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த திட்டத்தை செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் இங்கு நாம் பயணித்த போது புதிய பிரச்சினைகள் ஏற்படவதற்கான எந்தவொரு சாத்தியக்கூறும் தென்படவில்லை.
ஆகவே சம்பூர் கடற்படை முகாம் இடமாற்றம் செய்வதனூடாக தேசிய பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் ஏற்படாது என்றார்.
அதேவேளை, சம்பூர் அனல்மின் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கான புதிய ஒப்பந்தம் இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ளது. என்றார்.
சம்பூரில் கடற்படை முகாம் அகற்றப்படுவது உறுதி!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
Reviewed by Author
on
February 24, 2016
Rating:

No comments:
Post a Comment