தொண்டையில் வாழைப்பழம் சிக்கி 18 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...
18 மாத பெண் குழந்தையின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கியதால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒன்று அலவத்தேகம என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.
கலகெதர பொலிஸ் பிரதேசத்தைச்சேர்ந்த இக்கிராமத்தில் வீடொன்றில் பெற்றோர் வாழைப்பழம் ஒன்றின் பகுதியை 18 மாத பெண் குழந்தையின் கையில் கொடுத்துள்ளனர்.
இக்குழந்தை அதனை வாயில் போட்டு விழுங்கிய போது அது தொண்டயில் சிக்கி மூச்சுத்திணறச் செய்துள்ளது. இதனால் குழந்தை வேதனையால் துடிக்கவே பெற்றோர் குழந்தையை உடனடியாக மெதவல வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்ற போது குழந்தை அங்கு உயிரிழந்து காணப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்தது.
இக்குழந்தையின் திடீர் மரணம் தொடர்பான மரண விசாரணையை தும்பளை பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வை. ஜீவதாஸ் நடத்தினார். சாட்சியங்களையும் வைத்திய பரிசோதனை அறிக்கையையும் பதிவு செய்து கொண்ட பின் வாழைப்பழத்துண்டு குழந்தையின் தொண்டையில் சிக்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது என தீர்ப்பில் தெரி வித்துள்ளார்.
தொண்டையில் வாழைப்பழம் சிக்கி 18 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

No comments:
Post a Comment