அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் பெருமை வடக்கு மாகாணத்தின் முதன்மையான இடத்தை மன்.துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை வெற்றி கொண்டது……


மன்னாரின் பெருமை வடக்கு மாகாணத்தின் முதன்மையான இடத்தை மன்.துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை வெற்றி கொண்டது……
வடமாகாணத்தில் உள்ள 1025 பாடசாலைகள்  20 மாணவர்களுக்கும் குறைவாக 2014 ம் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையில் தோற்றியிருந்தது. அந்த 1025 பாடசாலைகளிலும் எமது பாடசாலை மன்.துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை 2014 ம் நடைபெற்ற சாதாரண தரப்பரீட்சையில் 100ற்கு 100மூ வீதம் சித்தியனைந்து வடமாகாணத்தின் முதன்மையான இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக 06-02-2016 சனிக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.

பாடசாலை பற்றி சுருக்கமாக….
தலைமன்னார் பிரதான வீதியில் வலப்பக்கமாக மாதா திருச்சுருவத்தோடு 1.5 ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மைதானம் இல்லை சுற்றி மதில் இல்லை சில கொட்டில் வகுப்பறைகளோடு மழைகாலத்தில் பாடசாலைக்குள் வெள்ளம் எந்த வித பாடசாலைக்குரிய வசதிகளற்ற நிலையில் 250 மாணவர்களோடு 15 நிலையான ஆசிரியர்களும் 2 பகுதி நேர ஆசிரியர்களோடும் அதிபருமாக இயங்கிக்கொண்டிருக்கும் பாடசாலையான  மன்.துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை தான் இந்தச்சாதனையை புரிந்துள்ளது என்றால் மன்னார் மாவட்டமும் மக்களும் பெருமைப்படவேண்டிய விடையம் தானே…

சாதனை புரிந்த மாணவிகள்…….

வடிவேல் நகோமி 7A.B.C
அருள்ராஜ் பிரியதர்சினி A.B.4C.S
ஜெயராசா ஆன்மேரி   2A.4C.S
பாலு யானுஷா      A.B.3C.3S
யோவான் பற்றிஸ்ரா மேரிஸ்ரெலா A.B.3C.3S

இம்மாணவிகளின் திறமையினால் முதல் நிலையினை அடைந்த பாடசாலையும் பாடசாலைச்சமூகமும்  சாதனை மாணவிகளை கௌரவிக்கும் முகமாக ஏற்பாடு செய்த பாராட்டு விழாவிற்கு….பாடசாலை அதிபர் திருவாளர் P.N.E.பெர்னாண்டோ தலமையேற்க…

பிரதம விருந்தினராக திருமதி S.சுகந்தி செபஸ்ரியன் வலையக்கல்விப்பணிப்பாளர் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக….

அருட்பணி ஏ.விக்டர் சோசை குருமுதல்வர் (மன்னார் மறைமாவட்டம்)
கௌரவ எஸ்.பிறிமுஸ் சிராய்வா (வடமாகாண சபை உறுப்பினர்)
அருட்பணி ஆர்.ரெரன்ஸ் குலாஸ் பங்குத்தந்தை( கீளியன் குடியிருப்பு)
அருட்பணி ஏ.செபமாலை பங்குத்தந்தை பேசாலை
கலந்து கொண்டு மாணவிகளையும் பெற்றோர்களையும் பாடசாலைச்சமூகத்தினையும் பாராட்டி வாழ்த்தினார்கள்

விருந்தினர்கள் உரையின் சாரம்சமாக…

வடமாகணத்தில் முதல் நிலையினை வென்றிருக்கும் இப்பாடசாலையின் மாணவர்களுக்கும் பாடசாலைச்சமூகத்திற்கும் எமது வாழ்த்துக்கள் அத்தோடு பாடசாலை அதிபரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்டு  இப்பாடசாலைக்கு தேவையான மைதானம் சுற்று மதில் வகுப்பறைகள் எம்மால் முடிந்த வரையில் கட்டித்தருவதாகவும் கல்விவளர்ச்சியிலும் பாடசாலையின் ஏனைய செயற்பாடுகளிளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்று உறுதியளித்தனர் விருந்தினர்கள்…

ஆயர் இல்லத்திற்கு சொந்தமான பாடசாலைக்கு அருகில் இருக்கும் காணியில் 400M  மைதானத்திற்கு தந்து பாடசாலையின் விளையாட்டு அபிவிருத்திசெயற்பாட்டிற்கு பங்களிப்பு செய்யுமாறு பாடசாலைச்சமூகம் வேண்டுகோள் விடுத்தது அதற்கு அருட்பணி ஏ.விக்டர் சோசை குருமுதல்வர் மன்னார் மறைமாவட்டம் அவர்கள் மிகவிரைவில் நல்லதொரு முடிவை எமது ஆயர் இல்லபரிபாலகர் சபையிடம் ஆலோசனையின் பின் தருவதாக உறுதியளித்தார்.

பாடசாலை மாணவிகளின் கண்கவர் கலை நடன நிகழ்வுகள் இடம் பெற்றது. இவற்றை கவனித்த திருமதி எஸ்.சுகந்தி செபஸ்ரியன் வலையக்கல்விப்பணிப்பாளர் அவர்கள் இப்பாடசாலையில் இவ்வாறு நடனமாடுகின்ற மாணவிகள் இருக்கின்றார்கள் எனும் போது மிகவும் மகிழ்ச்சிதான் ஆனாலும் பாடசாலை நிகழ்வுகளில் சினிமாப்பாடல்களுக்கு நடனமாடுவதை தவிக்குமாறு கேட்டுக்கொண்டார். மாணவமாணவிகளின் கல்விச்செயற்பாடு திசை திரும்புவதற்கு காரணமாக அமைந்து விடும் அதே வேளை சங்கீத ஆசிரியர்களின் வினைத்திறன் மிக்க ஆசிரிய மாணவ செயற்பாட்டிற்கு பணிக்கும் இடையூறாக அமைகின்றது என்றார்,

இந்த நிகழ்வை முன்னின்று ஏற்பாடும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினையும் தொகுப்பும் தேசியக்கலைஞர் நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன் அவர்கள் வழங்கினார்.










































மன்னாரின் பெருமை வடக்கு மாகாணத்தின் முதன்மையான இடத்தை மன்.துள்ளுக்குடியிருப்பு றோ.க.த.க.பாடசாலை வெற்றி கொண்டது…… Reviewed by Author on February 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.