மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு 29-02-2016 இன்று அருட்சகோதரர் றெஜினோல்ட் அவர்கள் புதிய அதிபராக .....
புதிய அதிபர் அவர்களை காலை புனித மரியன்னை ஆலயத்தில் சிறப்புத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மரியன்னை ஆலயத்திலிருந்து ஆசிரியர்கள் மாணவர்கள் பழையமாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் சகிதம் அழைத்துவரப்பட்டதோடு பாடசாலைக்கொடியினை முன்னாள் அதிபர் அருட்சகோதரர் ஜோசப் அகஸ்ரின் அவர்கள் ஏற்றி வைத்ததுடன் மங்களவிளக்கேற்றல் நிகழ்வுடன் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இவ்நிகழ்வினில் மன்னாரின் கல்விக்குரல் அமைப்பினரும் அதன்தலைவர் சூரியன் பண்பலையின் நிகழ்ச்சி முகாமையாளரும் சமாதான நீதவானுமாகிய எஸ்.என்.டிலான் அவர்களினால் அதிபரை வாழ்த்தி பதாதை வைத்ததுடன் அமைப்பு சார்பில் மாலையணிவித்தும் கௌரவப்படுத்தி வாழ்த்தி வரவேற்றனர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு 29-02-2016 இன்று அருட்சகோதரர் றெஜினோல்ட் அவர்கள் புதிய அதிபராக .....
Reviewed by Author
on
February 29, 2016
Rating:

No comments:
Post a Comment