அண்மைய செய்திகள்

recent
-

எமில் நகர் முதலாம் வீதியுடன் கொம்பியூட்டர் வீதி உள்ளடங்களாக 17 வீதிகளை…..





மன்னார் எமில்நகர் 1ம் வீதியினை புனரமைத்து தருமாறு பல வருடங்களாக நகரசபைச்செயலாளர் அவர்களிடம் பலமுறை விண்ணப்பங்களை வழங்கி இருந்த போதும் எந்தவிதமான திருத்த வேலைகளும் நடைபெறவில்லை
 ஒரு முறை களிமண் வீதிகளில் பரவினார்கள்
 மழைவெள்ளத்துடன் கரைந்து போனது போனவருடம் கிறவல் பரவி வீதியை சீர்செய்திருந்த போதும் கடந்த மாதங்களில் பெய்த கடும் மழையினால் வீதி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

குண்டும் குழியுமாக மின்விளக்குகள்  இல்லாமையினாலும் இரவுப்பயணங்கள் மிகவும் சிரமமானதாகவுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக நியூமன்னார் இணையம் நகரசபைச்செயலாளரிடம் மக்களின் வேண்டுகோளை முன்வைத்தபோது ஏற்றுக்கொண்ட நகரசபைச்செயலாளர்  மாகாணசபையின் கோட்பாட்டிற்கமைவாக எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஜெய்க்கா அமைப்பினரின் செயற்றிட்டத்தில் எமில் நகர் முதலாம் வீதியுடன் கொம்பியூட்டர் வீதி உள்ளடங்களாக 17 வீதிகளை 0.5 கிலோ மீட்டர் தூரம் புனரமைக்கும் பணி பங்குனி மாதத்தின் நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்படும் என்றார்.
மன்னாரில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.  ஒவ்வொன்றாக நடைபெறும் மன்னார் மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதே எமது பணியாகும்.
எமில் நகர் முதலாம் வீதியுடன் கொம்பியூட்டர் வீதி உள்ளடங்களாக 17 வீதிகளை….. Reviewed by Author on February 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.