அண்மைய செய்திகள்

recent
-

பக்தி எழுச்சியுடன் ஆரம்பமான அனைத்துலக சைவ மாநாடு


அனைத்துலக சைவ மாநாடு நேற்றுப் பிற்பகல் 1.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்று விருந்தினர்கள் மங்கல வாத்தியம் சகிதம் மாநாடு நடைபெறும் கைலாசபதி கலையரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாழ்.பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை தலைவர் பேராசரியர் மா.வேதநாதன் தலைமையில் ஆரம்பமான அனைத்துலக சைவ மாநாட்டின் தொடக்க நிகழ்வுகளாக; நந்திக்கொடி ஏற்றல், மங்கள விளக்கேற்றல், வேதபாராயணம், திருமுறை ஓதல், நடனம் என்பன நடைபெற்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் அனைத்துலக சைவமாநாட்டின் தொடக்க நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ஆ.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.பாஸ்கரன் ஆதார சுருதி உரையை ஆற்றினார். தொடர்ந்து ஆசியுரைகள், வாழ்த்துரைகள் இடம்பெற்றன.
அனைத்துலக சைவ மாநாட்டினை ஒட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் விழாக் கோலம் பூண்டிருந்ததுடன் மகர தோரணங்களும் நந்திக்கொடிகளும் சேர்ந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் பக்திச்சூழலை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பக்தி எழுச்சியுடன் ஆரம்பமான அனைத்துலக சைவ மாநாடு Reviewed by NEWMANNAR on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.