அண்மைய செய்திகள்

recent
-

அதிவேக இணைய சேவை : கூகுள் பலூன் இலங்கை வான்வெளியில்...


Project Loon என அழைக்கப்படும் அதிவேக இணைய சேவையை வழங்கும் கூகுள் பலூன், அதன் முதல் சோதனையை ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நேற்று  திங்கட்கிழமை இலங்கையில் ஆரம்பித்துள்ளது.

இப் பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும்  மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக இன்று காலை (16) இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது.

இந்த கூகுள் பலூன்,  அமெரிக்காவின் தென் பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று முதல் பலூன் வழி இணைய சேவையின் பரீட்சார்த்த முயற்சிகள் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் பணிப்பாளர், பிரதம நிறைவேற்று அதிகாரி முகுந்தன்

கனகே தெரிவித்தார்.

 இந்த செயற்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் மலிவான விலையில் இணைய சேவையினை பெற்றுகொள்ள முடியும் எனவும் தொலைதொடர்புக் கோபுர உதவியின்றி இணைய வசதியைப் பெறும் உலகின் முதல் நாடாக இலங்கை மாற்றம் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாய பரப்பிலேயே இந்த பலூன்கள் நிலை கொண்டிருக்கும்.  மறுசுழற்சி செய்ய கூடிய இந்த பலூன்கள் 180 நாட்கள் வாழ்தகவுடையன.

பலூன் வழி இணைய சேவை தொடர்பாக கூகுள் நிறுவனத்துக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமிடையில் கடந்த வருடம் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

20 மில்லியன் சனத்தொகையை கொண்ட இலங்கையில் 3.3 மில்லியன் கைடக்கத் தொiபேசி இணைய தொடர்புகளும், 630,000 நிலையான இணைய தொடர்புகளும் காணப்படுகின்றன.

1989 ஆம் ஆண்டு கையடக்க தொலை பேசியை தெற்காசியாவிலேயே முதலில் அறிமுகப்படுத்திய  நாடு இலங்கையாகும்.

அதே போல் 2004 ஆம் ஆண்டு 3G தொழிநுட்பத்தையும் 2014 ஆம் ஆண்டு 4புG தொழிநுட்பத்தையும் இப் பிராந்தியத்தில் முதலாவதாக இலங்கை அறிமுகப்படுத்தியது.

அதிவேக இணைய சேவை : கூகுள் பலூன் இலங்கை வான்வெளியில்... Reviewed by Author on February 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.