அண்மைய செய்திகள்

recent
-

நீதிபதியாக பதவியேற்ற கனடா நாட்டின் முதல் திருநங்கை: சட்ட துறை அமைச்சர் பாராட்டு

நீதித்துறையின் ஒரு மைல்கல்லாக கனடா நாட்டு வரலாற்றில் முதன் முதலாக அந்நாட்டை சேர்ந்த திருநங்கை ஒருவர் மாகாண நீதிபதியாக அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுள்ளார்.
கனடாவின் மனிடோபா மாகாணத்தை சேர்ந்த திருநங்கையான Kael McKenzie என்பவர் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வந்துள்ளார்.

மனிடோபா பல்கலைகழகத்தில் சட்டம் பயன்றி அவர் கடந்த 2006ம் ஆண்டு வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

பின்னர் 5 ஆண்டுகளாக குடும்ப வழக்குகள், பொது மற்றும் உள்மாகாண வழக்குகளில் ஈடுபட்டு திறமையாக வாதாடி வந்துள்ளார்.

இந்நிலையில், சட்டத்துறையில் அவருக்கு இருந்த திறமையின் அடிப்படையில், அவரை மனிடோபா மாகாண நீதிபதியாக தெரிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

எனினும், வின்னிபெக் நகரில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் நீதிபதிகள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்றுக்கொண்டார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு இது. என்னை நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானபோது பல துறைகளில் இருந்து எனக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

நாடு முழுவதும் உள்ள சில திருநங்கைகள் இது எங்களுக்கே கிடைத்த ஒரு வெற்றியாக கொண்டாடுவதாக’ என்னிடம் உற்சாகமாக கூறினார்கள்.

எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த உயரிய பதவியையும், பொறுப்பையும் நேர்மையாகவும், சமூகத்திற்கு பாதுகாப்பு உண்டாக்கும் கடமையாக நினைத்து செயல்படுவேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

மனிடோபா சட்ட துறை அமைச்சரான Gord Mackintosh என்பவர் பேசியபோது, ‘இந்த பதவி அவருடைய நேர்மையான உழைப்பிற்கும், திறமைக்கும் கிடைத்த பலன்.

சட்டத்துறையில் அவர் காட்டிய அக்கறை தான் இந்த உயரிய பதவிக்கு அவரை கொண்டு வந்துள்ளது’ என பாராட்டியுள்ளார்.

கனடா வரலாற்றில் முதன் முதலாக நீதிபதியாக பதவியேற்றுள்ள Kael McKenzie-விற்கு ஒரு மனைவியும், இரண்டு ஆண் மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நீதிபதியாக பதவியேற்ற கனடா நாட்டின் முதல் திருநங்கை: சட்ட துறை அமைச்சர் பாராட்டு Reviewed by Author on February 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.