உலகம் முழுவதும் மரண தண்டனையை நீக்க வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்...
மனித உரிமைகளுக்கு எதிரான மரண தண்டனையை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என உலகத் தலைவர்களுக்கு கத்தோலிக்க தலைவரான போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாட்டிகன் நகரில் உள்ள St. Peter's Square என்ற இடத்தில் நேற்று பிற்பகல் போப் பிரான்சிஸ் உரை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது பேசிய போப் பிரான்சிஸ், ‘உலகம் முழுவதும் உள்ள சட்ட அமைப்புகளில் மரண தண்டனையை நீக்க வேண்டும். ’’நீங்கள் யாரையும் கொல்ல கூடாது” என்ற எண்ணம் அப்பாவி நபருக்கும் குற்றவாளி நபருக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும்.
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது. குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கும் வாழும் உரிமை இருக்கிறது. இவர்கள் மீது மரண தண்டனையை திணிப்பது என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போது குற்றவாளிக்கு நிறைவேற்றப்பட உள்ள மரண தண்டனையை உடனடியாக தள்ளிப்போட வேண்டும்.
ஒரு மனிதனுக்கு கடவுள் அளித்த வாழ்க்கையை மற்றொரு மனிதன் பறிப்பது என்பது கடவுளுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, மரண தண்டனையை தடை செய்ய உலக தலைவர்கள் முன் வர வேண்டும் என போப் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
2015ம் ஆண்டின் புள்ளிவிபரத்தின் அடிப்படையில், உலகம் முழுவதும் சுமார் 101 நாடுகள் மரண தண்டனையை நீக்கி விட்டாலும், அமெரிக்கா, சீனா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 30 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் மரண தண்டனையை நீக்க வேண்டும்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்...
Reviewed by Author
on
February 22, 2016
Rating:

No comments:
Post a Comment