அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்!


வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஆசிரியரின் இடமாற்றத்தைத் இரத்துச் செய்யக் கோரி இரண்டாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய விளையாட்டுத்துறை ஆசிரியரை அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோகத்தின் மூலம் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்து மாணவா்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் பாடசாலைக்கு ஒவ்வாத சீருடை அணிந்து வருவது தொடர்பாக நடவடிக்கை எடுத்தமையாலும், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மகனது சீருடை தொடர்பாக நடவடிக்கை எடுத்தமையாலும் விளையாட்டுத்துறை ஆசிரியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மாணவர்கள் இவ் இடமாற்றத்தை நிறுத்தக் கோரியே தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.



அத்துடன், கடந்த வெள்ளிக்கிழமை தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதுவரை எந்த அதிகாரிகளும் சாதகமான பதிலை வழங்காமையால் இரண்டாம் நாளாகவும் தாம் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, அதிகார துஸ்பிரயோகம் செய்யாதே, மகாவித்தியாலயத்தை வீழ்த்த நினைக்காதே என்ற கோசங்களை மாணவர்கள் எழுப்பியதோடு பதாதைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமராஜாவிடம் கேட்ட போது,

ஆசிரியரின் இடமாற்றம் மாகாணசபையின் சுற்றுநிரூபத்திற்கு ஏற்ப ஒரு வழமையான நடவடிக்கை. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. அந்த இடமாற்றம் குறித்து அவர்கள் முறைப்படி அணுகமுடியும்.

உயர்தரப் பரீட்சை நெருங்கும் நிலையில் மாணவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்வது பிழையான ஒரு நடவடிக்கை.

இது தொடர்பில் உயர்தர வகுப்பு மாணவர்களின் பெற்றோருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள ஒழுங்குபடுத்துமாறு குறித்த பாடசாலை அதிபரிடம் தெரிவித்துள்ளேன்.

இது ஒரு சிலர் பாடசாலையை குழப்புவதற்காக செய்யும் செயற்பாடு எனவும் தெரிவித்தார்.






வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்! Reviewed by NEWMANNAR on February 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.