அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை புனித லூர்து அன்னையின் ஆலய கட்டுமான பணிக்கு தொடர்ந்தும் இடையூறு: மக்கள் கவலை


வரலாற்று சிறப்பு மிக்க மாந்தை புனித லூர்து அன்னையின் ஆலயவேலைகளை பூர்த்தி செய்வதற்கு இன்று வரை இடையூறுகள் இருப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் மாந்தை கோவில் அமைந்துள்ள பகுதியில் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்து வருவதாக மாந்தை வாழ் மக்கள் கூறியுள்ளனர்.


ஏற்கனவே, அரசாங்கம் புனித லூர்து அன்னையின் ஆலயத்தை அமைப்பதற்கு அனுமதியினை வர்த்தமானியில் அறிவித்திருந்தும் ஒரு சில அதிகாரிகளின் அசமந்தபோக்கால் அனுமதியினை தர மறுப்பதாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.

சுமார் 345 வருடங்களுக்கு முன்பிருந்தே குறித்த ஆலயம் அப்பகுதியில் இருந்துள்ளது.

இங்கு வைக்கப்பட்டிருந்த மாதாவினுடைய சுருபம் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வேத விசுவாசிகளால் காடு வழியாக மடுவிற்கு கொண்டு செல்லப்பட்டு மடுவில் வைக்கப்பட்டிருந்தது.

அவ்வாறு பல பிரச்சினைகளுக்கு மத்தியில் உள்ள மாந்தை புனித லூர்து அன்னையின் ஆலயத்தை கட்டி முடிப்பதற்கு தொடர்ந்தும் தடைகள் இருந்து வருவதாக மக்கள் கவலையடைந்துள்ளனர்.

எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் ஏற்ற நடவடிக்கையினை எடுக்குமாறு மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மாந்தை புனித லூர்து அன்னையின் ஆலய கட்டுமான பணிக்கு தொடர்ந்தும் இடையூறு: மக்கள் கவலை Reviewed by NEWMANNAR on February 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.