அண்மைய செய்திகள்

recent
-

துரையம்மா அன்பகமானது பூமலர்ந்தான் கிராமம் 23மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு



துரையம்மா அன்பகத்தின் 05-02-2007 இருந்து 21-02-2016   9ம் ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு பூமலர்ந்தான் கிராமம் 23  வறிய மாணவர்களுக்கு   பெறுமதியான கல்விக்கான ஊக்குவிப்பு உதவி வழங்கல் நிகழ்வு  21.02.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 03.00 மணியளவில் பூலர்ந்தான் கிராமத்தின் பொது மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
9ம் ஆண்டு ஆரம்பத்தை முன்னிட்டு கிராமசேவை அலுவலகர்  மடுபிரதேச செயலளர் பாடசாலை அதிபர்கள் ஆகியோரின் அனுமதியுடன் பூமலந்தான் கிராமத்தில் 22 மாணவர்களும் மளுவராயர் கட்டையடம்பனில் 1 மாணவியும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கற்றல் உபகரணங்களான பயிற்சிப் புத்தகம் சப்பாத்து-கொப்பிகள்-பாடசாலை பேக்- கொம்பாஸ்-பேனா-பென்சில்- அழிறபர்- கத்தரிக்கோல் என்பன 21.02.2016ம் திகதி பிற்பகல் 3.00 மணியளவில்
       
பிரதம விருந்தினராக....
திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல்;
மேலதிக அரசாங்க அதிபர்
மன்னார் மாவட்டம்

சிறப்பு விருந்தினர்களாக....
திரு.F.C.சத்தியசோதி
பிரதேச செயலாளர்
மடு
திரு.மாணிக்கவாசகர் ஸ்ரீஸ்கந்தக்குமார்
பிரதேச செயலாளர்
மாந்தை மேற்கு

கொளரவ விருந்தினர்களாக....
M.M.மரியலூதாகரன்- அதிபர்
 றோ.க.க.பாடசாலை
 கட்டை அடம்பன்- மடு

S.அமலநாதன்-அதிபர்
அ.த.க.பாடசாலை தம்பனைக்குளம்
மடு

D.டிக் ஷன் பெரேரா
கிராம சேவகர்               
பூமலர்ந்தான்-மடு

C.பெனடிற்
கிராம சேவகர்
மாதாகிராமம்-மடு

E.டெலிஷன் டிஷாந்த்
கிராம சேவகர்
தேவன் புட்டி
மாந்தை மேற்கு

திருமதி.அசம்டா கவீந்திரன்
கிராம சேவகர்
கள்ளியடி
மாந்தை மேற்கு

S.C.M.குரூஸ்
ஓய்வு பெற்ற கூட்டுறவு அலுவலகர்
பேசாலை-மன்னார்.
இவர்களுடன் மாணவமாணவிகள் பெற்றோர்கள் துரையம்மா அன்பக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்


நிகழ்வுகளாக;;;;;;;;;

  வரவேற்புரை - செல்வி.துரைசாமி கமலாவதி (றுசுனுளு)
  தலைமை உரை - திரு.வே.மனுவேல்பிள்ளை (உதயன்- உறுபிபனர்   துரையம்மா அன்பகம்)
 சிறப்புரையினை-வை-கஜேந்திரன் -உறுபிபனர் துரையம்மா அன்பகம்
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மாணவ மாணவிகளுக்கு பாடசலை கற்றல் உபகரணங்களை வழங்கியதோடு சிறப்புரையாற்றினர்

விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக......
மன்னார் மாவட்டத்தில் பல அமைப்புகள் இவ்வறான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தாலும் துரையம்மா அன்பகமானது தனித்துவமான சேவையாக ஒரு தாயைப்போல அன்புடன் அனைத்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பங்கு கொண்டு அவர்களின் எதிர்காலம் சிறப்புற அமைய தனது பாரிய சேவையினை செயலாற்றி வருகின்றது இச்சேவை பூமலர்ந்தன் கிராமத்தோடும் எனைய கிராமங்களையும் உள்வாங்க வேண்டும் அதற்கு நாங்களும் துணையாக் இருப்போம் எல்லாம் வல்ல இறைவனும் இவர்களுடன் இருந்து ஆசிவழங்க வேண்டும்.

 துரையம்மா அன்பக மூத்த உறுப்பினர் S.ராஜகோபால்
பிரதம விருந்தினர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல்-மேலதிக அரசாங்க அதிபர்
அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
மாணவ மாணவிகளின் நடனங்கள் பாடல் கவிதை கலை
நிகழ்வுகளுடன் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.

 நன்றியுரை திரு.டிக்ஷன் பெரேரா (கிராம சேவையாளர்-பூமலர்ந்தான்மடு
 வலயம்)
நிகழ்ச்சி தொகுப்பு-திருமதி-பொ.றொவீனா- செயலாளர்-துரையம்மா அன்பகம்

































































துரையம்மா அன்பகமானது பூமலர்ந்தான் கிராமம் 23மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு Reviewed by Author on February 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.