மன்னாரில் இருந்து கச்சதீவுக்கு புறப்பட்டார்கள் பக்தர்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த திருவிழாப் பணிகளைத் தொடர்ந்து நாளை காலை 6.00 மணிக்கு திருச்செபமாலையும், அதனைத் தொடர்ந்து, யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் திருவிழா கூட்டுத் திருப்பலி பூசையும் இடம்பெறவுள்ளன.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்களுக்காக உணவு மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, போக்குவரத்து வசதிகளை இலங்கை போக்குவரத்துச் சபையினரும், தனியார் போக்குவரத்துச் சபையினரும் இணைந்து மேற்கொள்கின்றார்கள்.
இன்று அதிகாலை 4 மணிக்கு யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் நெடுந்தீவிற்கு புறப்படும். இந்த வாகன ஒழுங்குகள் இன்று காலை 11.30 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
படகு சேவைகள் நெடுந்தீவு மற்றும் குறிகட்டுவானில் இருந்து காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
அத்துடன், 21ஆம் திகதி கச்சத்தீவில் இருந்து செல்லும் யாத்திரிகர்களின் படகு சேவைகள் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.
மன்னாரில் இருந்து கச்சதீவுக்கு புறப்பட்டார்கள் பக்தர்கள்
கச்சதீவு புனித அந்தோனியார் பெருவிழாவை முன்னிட்டு மன்னார் பகுதியிலிருந்தும் வழமைபோன்று பக்தர்கள் கூட்டம் படகுகளின் மூலம் இன்று கச்சதீவுக்கு புறப்பட்டனர்
கடல் சற்று பாதகமாக இருந்ததால் இம்முறை பக்தர்கள் கூட்டம் மன்னார் பகுதியிலிருந்து புறப்பட்டது வழமையைவிட குறைவாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெறுகிறது. இலங்கை இந்திய நாட்டிலிருந்து சுமார் ஏழாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ் திருவிழாவை முன்னிட்டு மன்னார் பகுதியிலிருந்தும் குறிப்பாக தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர், பேசாலை, பள்ளிமுனை ஆகிய கடற்கரை பகுதியிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் குடும்பமாகவும் நண்பர்களாகவும் புறப்பட்டுள்ளனர்.
பயணத்துக்கு கடல் சற்று கொந்தளிப்பாக இருந்தமையால் அதிகமான பக்தர்கள் குடும்பமாக செல்வதில் தயக்கம் காட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பாதுகாப்பைக் கருதி ஒரு படகில் பத்துபேருக்கு மேல் பயணிக்க வேண்டாம் என கடற்படையினர் படகோட்டிகளுக்கு அறிவுத்தல் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கச்சதீவு சென்றவர்களின் பெயர் விபரம் மற்றும் செல்லும் படகுகளின் விபரங்களை ஓரிரு கடற்கரை கடற்படை பாதுகாப்பு சாவடியில் கையளித்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. சில இடங்களில் பக்தர்கள் படகுகளில் சுயமாக சென்றதாகவும் தெரிவித்தனர்.
நண்பகலுக்கு பின் கடல்கொந்தளிப்பு சற்று உரமாக மாறும் என்ற ஐயப்பாட்டால் அதிகாலையிலே அதிகமான படகுகள் கச்சதீவை நோக்கி பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு பயணிக்கு மன்னாரிலிருந்து கச்சதீவுக்கு சென்றுவர 1000 ரூபா தொடக்கம் 2000 ரூபா வரை அறவிட்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Reviewed by NEWMANNAR
on
February 20, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment