மன்னாரில் மாபெரும் மாகாண விவசாயக் கண்காட்சி–14-16- 2016 (ஒருபார்வை)
மாகாணவிவசாயக் கண்காட்சி– 2016 (ஒருபார்வை)
வட இலங்கையிலே கடல் வளமும்ääகளனிகள் நிறைந்தநெல் வளமும் மிகையாக விளங்குவது மன்னார் மாவட்டம். நெல்லுக்கே உரித்தான மண் இருப்பதுவும் இம் மாவட்டத்திற்கு தனிசிறப்பு. இருப்பினும் ஏனைய பயிர்கள் ஒப்பீட்டளவில் விவசாயிகள் செய்கை பண்ணுவது மிககுறைவு. அவ்வகையில் உழவை வழிப்படுத்தää ஊக்கமளிக்கää ஆலோசனை வழங்க அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் விவசாயத்திணைக்களம். அதன் உன்னதமான பணிகளில் செய்துகாட்டல்ää விளக்கமளித்தல்ää காட்சிப்படுத்தல் என்பவை மிகமுக்கியமானவை. அதற்கான தளமாக அமைவதுதான் மாவட்டம் தோறும் காணப்படும் மாவட்ட விவசாயப் பயிற்சிநிலையங்கள். அவ்வகையில்-
கடல் அணைக்கும் மன்னார் மாவட்டத்திலே உப்புக்காற்றும்ää உவர் நிலமும் உள்ளடங்கிய உயிலங்குளம் பகுதியிலே நெற்செய்கை உயர்ந்து இருந்தாலும் ஏனைய பயிர்களும் செய்திடமுடியும் என பறைசாற்றி நிற்கிறது. மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் காணப்படும் காட்சிப் பயிர்கள்
“சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாயஉற்பத்தி” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் பங்குனி 14-15-16ம் திகதிகளில் கண்காட்சி நடைபெறவுள்ளது. இங்கு சுழலை பாதிக்காத பேண்தகு விவசாய நடைமுறையை ஒத்த பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கி மேற்படி கண்காட்சி நடைபெறவுள்ளது. இந் நிகழ்வு விவசாயிகளுக்கும்ää விவசாயகல்விகற்கும் மாணவர்களுக்கும் மட்டுமல்லாது அனைவருக்கும் ஆரோக்கியமான பலசெய்திகளை வழங்க எத்தனிக்கும் என்பதில் எவ்வித ஜயமும் இல்லை. அங்குள்ள பிரதான அம்சங்களை இவ் ஆக்கத்திலே மேலோட்டமாக எடுத்தியம்புவது சாலபொருந்தும் என எண்ணி தொடருகிறோம்.
நெற்செய்கை
நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிவகைகளாக இரசாயன பசளையையும் சேர்த்து 200 பூசல் வரை விளைவு எடுத்தல்ääஒருங்கிணைந்த பீடைக்கட்டுப்பாடுää புதியநெல்லினங்கள்ää நாற்றுநடுகை இயந்திரம் மூலம் நெற்செய்கைää களைகட்டுப்பாட்டிற்கான சிறந்த வழிமுறைகள்ää என எண்ணற்ற பல விடயங்களை களத்திலே செய்துகாட்டியும் காட்சிகளாக வெளிக்காட்டியும் உயர் நெல் உற்பத்திக்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
மறு வயற் பயிற்செய்கை
நெல்தவிர்ந்த ஏனைய தான்யங்கள்ääபணப்பயிர்கள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிக்க கூடிய வழிமுறைகளை வெளிக்காட்டும் பகதியாக அமைந்துள்ளது. எம்மில் பலர் அறியாத இறுங்குääசாமைääதிணைääகம்பு கூட இங்கு உண்டு என்றால் மிகையாகாது.
பூங்கனியியற் பயிர்கள்
இப்பகுதியில் பழப்பயிர்களும் ääபூக்கனிக்கன்றுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பழப்பயிர்களிலே தரமான உற்பத்தியை பெறுவதற்கான நீர் முகாமைத்துவம் ääபசளைப் பாவனைää மூடுபடையிடல் ääகத்தரித்தலும் ääபயிற்றுவித்தலும் என்னும் செயற்பாடுகள் களத்திலே செயற்படுத்தப்பட்டுள்ளது. எம்மில் பலருக்கு தெரியாத ரகன்புறூட் என்னும் பழப்பயிரும் இப்பகுதியில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலாக பூக்கன்றுகள் அழகாகப் பயிரிடல் ääகத்தரித்தல் ääவடிவங்களாகப் பராமரித்தல் என பல்வேறு உத்திகளை பராமரித்தல் பயன்படுத்தி நில அலங்காரத் தத்துவம் சிறப்பாக செயற்படுத்தப்பட்டுள்ளது.
மரக்கறிப் பயிர்கள்
இப்பகுதியில் உள்@ர் மரக்கறிகள்ää பாரம்பரிய மரக்கறிகள் ääமேல் நாட்டு மரக்கறிகள் சிலவகை கிழங்கினங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் இனங்கள் ääபீடைக்கட்டுப்பாடு ääநவீனநீர்ப்பாசனமுறைகள் ääபொருத்தமற்ற காலத்திலும் பயிர்ச்செய்கை மேறகொள்ளல் ääஏற்றுமதிக்கான நியமங்கள் போன்ற பிரதான செய்திகளை எடுத்தியம்புவதாகவும் உள்ளது.
நாற்றுமேடை
பசுமைக் குடில்களின் கீழ் நாற்றுமேடை நிழல் வலைகளின் ஊடாக நாற்றுக்களை வன்மைப்படுத்தல் ääநாற்றுமேடை பரிகரணம் ääநாற்றுமேடை வகைகள் ääபழப்பயிர் ääநாற்றுமேடைகள் என பல்வேறு செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மூலிகைப் பயிர்கள்
ஏம்மைச் சூழ எத்தனை மூலிகைகள் இருக்கின்றன. அவை எவ்வகை நோய்களை குணப்படுத்தும் போன்ற விடயங்களை உள்ளடக்கி இயற்கை மருத்துவத்தின் நிகரற்ற பெருமையாய் இப்பகுதி பெருமிதம் கொள்கின்றது.
நகர்ப்புறத் தோட்டம்
நரத்தில் நிலம் இருக்காது அல்லது நிலப்பற்றாக்குறை காணப்படும். அங்கு சுவரிலும் ääபொதிகளிலும் ääகம்பிக்கூடுகளிலும் ääஎவ்வாறு பயிரிடலாம் ääஎவ்வாறு எமது வீட்டுத் தேவையை நிவர்த்தி செய்யலாம் என்பதற்கு மேலாக நலம் தரும் பொழுதுபோக்குää குளிர்மையான சூழல் ääஅழகானவசிப்பிடம் என்பவற்றிற்கான அறிவுரை கூறும் பகுதியாக மிளிர்கின்றது.
வீட்டுத்தோட்டம்
வசிக்கும் வீட்டை எவ்வாறு அமைப்பது எமது தேவையை நாமே எவ்வாறு நிவாத்தி செய்வதுää அழகாக எவ்வாறு பயிரிடுவதுää கழிவுகளிலிருந்து கூட்டெருவை எவ்வாறு தயாரிப்பதுää எவையெல்லாம் வீட்டுத்தோட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்களை பார்ப்போருக்கு மனதில் படியும் படியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலாக வீட்டில் காணப்படும் பாரம்பரிய பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கான அடித்தளமிடும் காட்சியாகவும் கடந்து போன காலத்தின் கனிவை மீளக்கூறுவதாகவும் அமைந்துள்ளது. சுருக்கமாக கூறுவதனால் உடலுக்கு மட்டுமல்லாமல் உள்ளமும் உறுதிபெற வழி அமைப்பதாகவே வீட்டுத்தோட்டம் காணப்படுகின்றது.
பண்ணை இயந்திரப் பகுதி
நவீனயுகத்தில் உழவில் உட்புகுத்தக் கூடிய பல்வேறு செயற்பாடுகளுக்கான இயந்திரங்கள் இப்பகுதியில் அணிவகுக்கின்றன. இவ் உபகரணங்கள் மூலம் உற்பத்தி இழப்பை இல்லாமல் செய்வது மட்டுமல்லாது உற்பத்தி தரத்தை அதிகரிப்பதோடு உற்பத்தி செலவை குறைக்கமுடியும்.
ஏனையவை
மேலே கூறப்பட்ட விவசாய பெரும் பகுதிகளை விட சேதன பசளை தயாரித்தல்ää இலை மரக்கறிப் பயிர்கள் ää வேர் கிழங்குப்பயிர்கள் ääதேனீவளர்ப்புää கால்நடைப் பகுதி என பல்வேறு காட்சித் துண்டங்கள் நல்ல செய்திகளை செப்புவதாகவே உள்ளது.
மத்தியவிவசாயத் திணைக்களம்.
நாட்டின் பல பாகங்களிலும் இயங்கும் விவசாய ஆராய்சி பகுதிää விதை உற்பத்திபகுதிää பண்ணை இயந்திரப்பகுதிää பிரசுரப்பகுதிää பண்ணை ஒலிபரப்புப்பகுதி என பல்வேறு பிரிவுகளும் இந்நிகழ்வில் கலந்து தமது சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கவுள்ளன.
விவசாயத்துடன் தொடர்புடையநிறுவனங்கள்
விவசாயத்திணைக்களத்தை விட பனைää தென்னை அபிவிருத்திச்சபைää மரமுந்திரிகை கூட்டுஸ்தாபனம் ää வானிலைஅவதானிப்புநிலையம் ää நீர்ப்பாசனத் திணைக்களம் ääகால்நடைசுகாதாரத் திணைக்களம் ääசுதேசமருத்துவ திணைக்களம்ää கமநலசேவைகள் திணைக்களம் ääவிவசாயக் கம்பனிகள் ääநாற்றுமேடைஉற்பத்தியாளர்கள் ääஉள்@ர் உற்பத்திநிறுவனங்கள் என்பனவும் தனித்தனியாக காட்சிக் கூடங்கள் அமைத்து மேற்படி கண்காட்சியில் பங்கேற்கவுள்ளன.
அரங்கநிகழ்வு
நெல் நாற்றால் அழகாக அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இது நெல் உற்பத்தியின் உயர்வையும் ääநெல்லின் தன்னிறைவடைந்துள்ள நாட்டையும் ääநெற்செய்கையால் மனமகிழும் உழவின் உள்ளத்தையும் வெளிக்காட்டும் களமாகவே அரங்கம் அமைந்துள்ளது. இவ் அரங்கம் விவசாய பெருந்தகைகளின் உரைக்காகவும் ääமாணவர்களின் கலைத்திறமைக்காகவும் ää இளம் விவசாயிகளின் விவசாய வித்துவ நிகழ்விற்காகவும் காத்திருக்கின்றது.
நிறைவாக
அளப்பரிய கண்காட்சியை தொட்டுக்காட்டிய கட்டுரையாகவே இவ்வாக்கம் அமைந்துள்ளது . அதனை பார்ப்பதும் பயன் பெறுவதும் உங்களது கையிலேயே உள்ளது. விவசாயிகளுக்கும் விவசாயம் சார்ந்த சமூகத்திற்கும் எதிர்வரும் பங்குனி 14 ää 15 ää16ம் திகதிகள் மறக்கமுடியாத உழைப்புக்கும்ää உழவுக்கும் உதவுகின்ற உன்னதநாட்கள.; அந் நாட்களை சிறப்பாக பயன்படுத்த மன்னார் மாவட்டத்தில் உள்ள விவசாயபயிற்சி நிலையத்திற்கு வாருங்கள் வரலாற்று நிகழ்வை ஒருதரம் பாருங்கள்.
மன்னாரில் மாபெரும் மாகாண விவசாயக் கண்காட்சி–14-16- 2016 (ஒருபார்வை)
Reviewed by Author
on
March 12, 2016
Rating:

No comments:
Post a Comment