தகைமையற்ற சிற்றூழியர் மேற்பார்வையாளர்களினால் சீர்கெட்டுப் போயுள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம்
சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் பணியாற்றும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம், தகைமையற்ற சிற்றூழிய மேற்பார்வையாளர்களினால் சீர்கெட்டுப் போயுள்ளது.
உரிய தகைமையடிப்படையில் மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்படாததனாலேயே இந்தக் குறை நிலவுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இங்கு பணிபுரியும் பல சிற்றூழியர்களும் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதோடு மட்டுமன்றி, தனிப்பட்ட விரோதம் காரணமாக பழிவாங்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.
ஒரு ஆஸ்பத்திரி நிர்வாகம் ஒழுங்காக, சரியாக இயங்க வேண்டுமானால்... அங்கு பணியாற்றும் சிற்றூழியர்கள் முதல் பெரிய வைத்தியர்களின் ஒத்துழைப்பிலேயே தங்கியுள்ளது, ஆனால் இங்கு நிலைமை தலைகீழ் காரணம் மேற்பார்வையாளர்கள்.
அது மட்டுமல்ல, நான்கு பேர் இருக்க வேண்டிய மேற்பார்வையாளர் அலுவலகத்தில் தேவையில்லாமல் ஏழு பேர்வரை கடமையில் ஈடுபடுகின்றனர் இதற்கு யார் காரணம்?
ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போறதுக்கெல்லாம் போட்டிப் பரீட்சை வைத்து பாடாய் படுத்தும் மாகாண சபை இதற்கெல்லாம் போட்டிப் பரீட்சை வைக்காமலிருப்பதன் மர்மம்தான் என்ன, கூடிய விரைவில் இதற்கொரு போட்டிப் பரீட்சையை நடாத்துமா?
ஆவலுடன்
N. மகேந்திரன்.
தகைமையற்ற சிற்றூழியர் மேற்பார்வையாளர்களினால் சீர்கெட்டுப் போயுள்ள மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகம்
Reviewed by NEWMANNAR
on
March 07, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 07, 2016
Rating:


No comments:
Post a Comment