நாடாளுமன்ற அமர்வு நடாத்தும் நேரத்தில் மாற்றம்....
நாடாளுமன்ற அமர்வு நடாத்தும் நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. நாளை முதல் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் வாரத்தின்; செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பிற்பகல் 1.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் அமர்வுகள்
நடத்தப்பட உள்ளது.
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலான காலப் பகுதியில் அவை ஒத்தி வைப்பு யோசனைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் வாரத்தின் வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும்ää 12.30 முதல் 1.30 வரையில் மதிய போசன இடைவேளை வழங்கப்பட உள்ளது.
பின்னர் பிற்பகல் 1.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையிலான காலப் பகுதியில் அவை ஒத்தி வைப்பு விவாதங்கள் நடைபெறவுள்ளன.
நாடாளுமன்ற அமர்வு நடாத்தும் நேரத்தில் மாற்றம்....
Reviewed by Author
on
March 07, 2016
Rating:
Reviewed by Author
on
March 07, 2016
Rating:


No comments:
Post a Comment