மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகக் கட்டிம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
புறநெகும வேலைத்திட்டத்தின் கீழ் 25 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகக் கட்டிட அமைக்க அடிக்கல் நாட்டும் விழா இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம் பெற்றது.
குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகஸ்தர் திருமதி.தி.புண்ணியலிங்கம் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் செயலாளர் .ச.ஜெனிங்ஸ் , மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சு.வரப்பிரகாசம் , முன்னாள் உப தவிசாளர் .சீ.சௌந்தரநாயகம், அடம்பன் பங்குத்தந்தை அருட்பணி நியூட்டன் அடிகளார்,ஆட்காட்டி வெளி பங்குத்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ அடிகளார்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகக் கட்டிம் அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 18, 2016
Rating:

No comments:
Post a Comment