முள்ளிக்குளம் கிராமத்தில் கஞ்சாப்பொதிகள் மீட்கப்படவில்லை-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை-முள்ளிக்குளம் கடற்கரைப்பகுதியில் கடந்த 15 ஆம் திகதி காலை 187 கிலோ கஞ்சாப்பெதிகள் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
எனினும் குறித்த கஞ்சாப்பொதிகள் முள்ளிக்குளம் கடற்கரைப்பகுதியில் மீட்கப்படவில்லை எனவும் சிலாபத்துறை 56 வீட்டுத்திட்ட கிராமப்பகுதியில் உள்ள கடற்கரை பகுதியிலே குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
முள்ளிக்குளம் கடற்கரை பகுதியில் கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து அக்கிராம மக்கள் வேதனையடைந்துள்ளதோடு,அக்கிராம மக்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் குறித்த செய்தி பாதீப்பை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-இச்சம்பவம் குறித்து முள்ளிக்குளம் கிராம மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இச் செய்தி தொடர்பாக மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பை ஏற்படுத்திய போது தவறுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும்,உண்மையிலேயே குறித்த கஞ்சாப்பொதிகள் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை 56 வீட்டுத்திட்ட கிராமப்பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சிலாபத்துறை 56 வீட்டுத்திட்ட கடற்கரை பகுதியிலே குறித்த கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் நீதிமன்ற பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்தார்.
முள்ளிக்குளம் கிராமத்தில் கஞ்சாப்பொதிகள் மீட்கப்படவில்லை-பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.
Reviewed by NEWMANNAR
on
March 18, 2016
Rating:
No comments:
Post a Comment