அண்மைய செய்திகள்

recent
-

அக்கறையோடு எம்மை விசாரிப்பவர்கள் அரச புலனாய்வாளர்களும் இராணுவத்தினருமே! புனர்வாழ்வு பெற்றவரின் ஆதங்கம்!


எங்கள் மீது அதிக அக்கறையும், கரிசனையும் கொண்டு நலன் விசாரிப்பவர்கள் அரச புலனாய்வாளர்களும், இராணுவத்தினருமே தவிர வேறு எவரும் இல்லை என இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுப்பிரமணியம் இலிகிதர் தெரிவித்துள்ளார்.
திருக்கோயில், விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் வாழ்ந்துவரும் சுப்பிரமணியம் இலிகிதர்,  தான் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

34 வயதான தான் அயல்வர்களின் மாடுகளை கூலிக்கு மேய்ப்பதுடன் அவர்களது வயல்களிலும் வேலைசெய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், யுத்த காலத்தில் தனது கை மற்றும் கால்களில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தனக்கு கடினமான வேலைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தன்னுடைய குடும்பத்தினை பார்க்கவேண்டும் என்பதனால், தன்னால் இயன்ற எந்த வேலையாவது செய்து வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதும், வயல் வேலைகளில் ஈடுபடுவதை மாத்திரம் தொழிலாக செய்யமுடியும் என்றும் வேறு எதனையும் செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும், சிலநேரங்களில் மீன்பிடிப்பதற்காக செல்வதும் உண்டு என அவர் கூறியுள்ளார்.

எனவே, குழந்தை மனைவி மற்றும் மனைவியின் தாய், தந்தையருடன் வாழ்ந்துவரும் இலிகிதர் தனது கஸ்டங்களை உணர்ந்து யாராவது எங்களுக்கு உதவி செய்ய முன்வரும் பட்சத்தில், நாங்களும் சமூகத்தில் மற்றவர்களை போன்று வாழமுடியும் என அவர் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.




அக்கறையோடு எம்மை விசாரிப்பவர்கள் அரச புலனாய்வாளர்களும் இராணுவத்தினருமே! புனர்வாழ்வு பெற்றவரின் ஆதங்கம்! Reviewed by Author on March 07, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.