அண்மைய செய்திகள்

recent
-

தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல்...


இந்திய கிரிக்கெட்  அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தான் தற்கொலை செய்துகொள்ள நினைத்தமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சகலதுறை ஆட்டக்காரரான சுரேஷ் ரெய்னா, இருபதுக்கு - டி20 போட்டியில் சிறப்பாக விளையாடக் கூடியவர்.

இந்நிலையில் தான் தற்கொலை தற்கொலை செய்ய நினைத்தமை குறித்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

எனக்கு 13 வயது இருக்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ரயிலில் தூங்கும்போது ஏதோ என் தோளில் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழித்தேன்.

என் கைகளை கட்டிப்போட்டுவிட்டு ஒரு சிறுவன் என் நெஞ்சு மீது அமர்ந்து என் முகத்தில் சிறுநீர் கழித்தான். ஒரு வகையாக அவனை கீழே தள்ளினேன்.

லக்னோவில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான விடுதியில் இருக்கையில் மிகவும் சிரமமாக இருந்தது. அங்கு பலர் என்னை வம்பிழுத்துக் கொண்டே இருந்தனர். இதனால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விளையாட்டு வீரர்கள் விடுதியில் ஒரு முறை என்னையும், என் நண்பனையும் ஹொக்கி ஸ்டிக்கால் அடித்தனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த என் நண்பன் கோமாவுக்கு சென்றுவிட்டான்.

இந்த விடுதி வேண்டவே வேண்டாம் என்று நினைத்து அங்கு சேர்ந்த ஒரே ஆண்டில் வீட்டிற்கு ஓடிவிட்டேன். ஆனால் என் சகோதரரின் அறிவுரையின் பேரில் 2 மாதங்கள் கழித்து மீண்டும் விளையாட்டு வீரர்கள் விடுதிக்கு சென்றேன் என தனது கசப்பான வாழ்க்கை அனுபவத்தை தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்ய நினைத்தேன் : ரெய்னா அதிர்ச்சி தகவல்... Reviewed by Author on March 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.