மன்னாரில் கடும்வரட்சி, சிறுபோகம் 1500 ஏக்கராக வீழ்ச்சி!
மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடும்வரட்சி காரணமாக நீர்மட்டம் குறைந்துள்ள அதேவேளை, 2016ஆம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டிற்கான சிறுபோக நெற்பயிர் செய்கை ஆரம்பிப்பதற்காக ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளநிலையில், இது தொடர்பாக விஷேட கூட்டம் இன்று இடம்பெற்றது.
உயிலங்குளம் வண்ணாமோட்டை விவசாய பயிற்சிநிலையத்தில், மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ்.தேசபிரிய தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
2015ஆம் ஆண்டு 3000 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் இவ்வாண்டு 1500 ஏக்கர் நிலப்பரப்பிலே சிறுபோக பயிர்செய்யை இடம்பெறவுள்ளது.
கடும் வெப்பம் காரணமாக வரட்சி ஏற்பட்டு நீர் மட்டம் குறைந்துள்ளமையே இதற்காண காரணம் என இக்கலந்துரையாடலின் போது சுட்டிகாட்டப்பட்டது.
கடந்த ஆண்டு கட்டுகரை குளத்தின் நீர்மட்டம் 10 அடியாக இருந்த போதிலும் இவ்வாண்டு வரட்சி காரணமாக நீர்மட்டம் 8 தொடக்கம் 7 அடியாக குறைவடைந்துள்ளது.
சிறுபோக நெற்பயிர் செய்கையின் விதைப்பு எதிர்வரும் மே மாதம் முதலம் திகதி முதல 21ஆம் திகதி வரைக்குள் விதைத்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் இம்முறை சிறுபோக செய்கைக்கென 13 வகையாக நெல்லினங்கள் விவசாய திணைக்களம் பரிந்துரை செய்துள்ளன.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலில் மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார், நானாட்டான் பிரதேச செயலாளர் பரமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கடும்வரட்சி, சிறுபோகம் 1500 ஏக்கராக வீழ்ச்சி!
Reviewed by Author
on
April 20, 2016
Rating:

No comments:
Post a Comment