ஸ்பெயினில் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த 600 கிலோ ரோமானிய நாணயங்கள் கண்டெடுப்பு...
தெற்கு ஸ்பெயினில் உள்ள Seville நகரில், கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது சுமார் 600 கிலோ எடையுள்ள பண்டைய ரோமானிய நாணயங்களை கண்டெடுத்துள்ளனர்.
Seville நகர தொல்லியல் அருங்காட்சியகத் தலைவர் Ana Navarro அதனை ஆராய்ந்து கூறுகையில், இது ஒரு தனிப்பட்ட தொகுப்பு.
இதுபோல் சில சமயங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.3ம் நூற்றாண்டின் கடைசி, அல்லது 4ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தை சேர்ந்த இந்த வெண்கல நாணயங்கள், Roman amphoras எனப்படும் 19 ஜாடிகளில் கிடைத்துள்ளது.
இந்த நாணயங்களின் மதிப்பு, நிச்சயமாக பல மில்லியன் யூரோக்களாக இருக்கும்.
ரோமானிய பேரசரர்கள் மேக்ஸிமியன் மற்றும் காண்ஸ்டண்டைன் ஆகியோரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள அந்த நாணயங்கள், கரைகள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதிகளவில் புழக்கத்தில் ஈடுபடுத்தப்படாதவை என்பது தெரியவருகிறது.
அவை ராணுவம், அரசு ஊழியர்கள் போன்றோருக்கு செலுத்துவதற்காக பாதுகாத்து வைக்கப்பட்டிருந்திருக்கலாம்.
அவைகளில் பெரும்பாலான நாணயங்கள், புதிதாக செய்யப்பட்டதாக உள்ளது. மேலும், வெண்கலத்தில் மட்டுமல்லாது வெள்ளியும் சேர்த்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நாணயங்களுக்கான பொருளாதார மதிப்பை கொடுக்க முடியாது. ஏனெனில் இந்த நாணயங்கள் வரலாற்று சிறப்பு கொண்டவை அதனை நாம் மதிப்பிடுவது இயலாத காரியம் ஆகும் என தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ளூர் அதிகாரிகள் அந்த இடத்தில் நடந்து வந்த கட்டுமான வேலைகளை தடை செய்துள்ளனர். மேலும், அந்த தளத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்றனர்.
ஸ்பெயினில் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த 600 கிலோ ரோமானிய நாணயங்கள் கண்டெடுப்பு...
Reviewed by Author
on
April 29, 2016
Rating:

No comments:
Post a Comment