பொதுமக்கள் பகலில் சமைத்தால் 2 ஆண்டுகள் சிறை: பீகார் அரசு அதிரடி உத்தரவு...
பொதுமக்கள் பகல் நேரங்களில் சமைக்க கூடாது என்றும், மீறினால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என பீகார் அரசாங்கம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பீகார் மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் கோடை வெப்பம் தாக்கி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் கோடை வெயிலுக்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் 1000க்கும் அதிகமான கால்நடைகள் மரணமடைந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு பீகார் மாநில அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறபித்துள்ளது.
அதில், ‘மாநிலம் முழுவதும் பொதுமக்கள் பகல் நேரங்களில் சமையல் பணியில் ஈடுப்படக்கூடாது.
அதாவது, காலை மற்றும் மதிய உணவுகளை காலை 9 மணிக்கு முன்னதாகவே சமைத்து முடித்துவிட வேண்டும்.
அதே போல், இரவு உணவுகளை மாலை 6 மணிக்கு பிறகு தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவை மீறும் பொதுமக்கள் மீது பேரிடர் மேலான்மை வாரியத்தின் 51’பி’ பிரிவுப்படி அபாரதத்துடன் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
கடுமையான வெப்பம் நிகழும் போது, வீடுகளில் சமையல் செய்தால் அதன் மூலம் தீ விபத்துக்கள் எளிதில் நிகழும் என்றும், மேலும், சுற்றுச்சூழலும் அதிகளவில் வெப்பமாவதற்கு இந்த உத்தரவு இடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பகலில் சமைத்தால் 2 ஆண்டுகள் சிறை: பீகார் அரசு அதிரடி உத்தரவு...
Reviewed by Author
on
April 29, 2016
Rating:

No comments:
Post a Comment