யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 400 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த மன்னார் புனர்வாழ்வு அமையம்.(படம்)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதார வசதி அற்ற பாடசாலை மாணவர்கள் 400 பேரூக்கு மன்னார் புனர்வாழ்வு அமையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், யுத்தத்தினால் பாதீக்கப்பட்ட மற்றும் பொருளாதார வசதி அற்ற பாடசாலை மாணவர்கள் 400 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த 19 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்காண கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இலுப்பைக்கடவை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் 17 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் புனர்வாழ்வு அமையத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன், தலைமையில் இடம் பெற்ற குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உப தலைவர் செல்வி சாந்தினி கஸ்மீர்,செயலாளர் அமல்ராஜ் பெர்ணாண்டோ,பொருளாளர் தோமஸ் மரியதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பெறுமதி வாய்ந்த கற்றல் உபகரணங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வுகளில் கிராம அலுவலகர்கள்,சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
தரம் 1 முதல் உயர்தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(04-04--2016)
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 400 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்த மன்னார் புனர்வாழ்வு அமையம்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 04, 2016
Rating:
No comments:
Post a Comment