15 கிலோ வெண்ணெய்யில் வடிவமைக்கப்பட்ட ஜெயலிதாவின் சிலை!
சென்னையில் சமையற்கலை நிபுணர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிமைத்துள்ளார்.
சென்னை சைதாபேட்டையில் இயங்கிவரும் தனியார் சமையல்கலை பள்ளியின் நிறுவனர் வினோத்.
காய்கறிகளில் சிற்பம் செதுக்கும் வல்லுநனரான இவர், கின்னல் உட்பட பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பதை வரவேற்கும் வகையில், அவரது உருவத்தை முழுவதும் வெண்ணையில் முப்பரிமாண சிலையாக வடிவமைத்துள்ளார்.
பளிங்கு சிலை போன்று காட்சியளிக்கும் இது, சுமார் 15 கிலோ வெண்ணெய்யை கொண்டு வடிவமைக்கப்படுகிறது, வெப்பம் காரணமாக இந்த சிலை உருகாமல் இருக்க -2 டிகிரி வெப்பநிலை உள்ள அறையில் வைத்து மிக நுட்பமாக வடிவமைத்து வருகிறார் வினோத்.
இன்னும் 2 நாட்களில் இந்த சிலைமுழுவதும் வடிவமைக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்படும் என வினோத் தெரிவித்துள்ளார்.
15 கிலோ வெண்ணெய்யில் வடிவமைக்கப்பட்ட ஜெயலிதாவின் சிலை!
Reviewed by Author
on
May 23, 2016
Rating:

No comments:
Post a Comment